Home » News » Trend

நீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு

நீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு
நீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு (படம்: WierzchosKacper)
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 10:10 PM IST
  • Share this:
அதிசயங்கள் நிகழ்வது மனிதர்களுக்கு அபூர்வம். ஆனால் இயற்கைக்கு அவ்வாறு இல்லை. அதிசயங்கள் கொட்டிக் கிடக்கும் விண்ணுலகத்தில் சமீபத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு வேறு தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கோள்களுக்கு பல நிலவுகள் துணைக்கோள்களாக இருக்கின்றன. பூமிக்கென்று ஒரு துணைக்கோள் உள்ளது என்றாலும், அத்தோடு ஒரு சிறு நிலவும் பூமியைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்தச் சிறு நிலவு ஒரு குறுங்கோளாகும். இதற்கு ’2020 CD3’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் விட்டம் 1.9-3.5 மீட்டராக உள்ளது; தோராயமாக இதுவொரு பசு அல்லது நீர்யானையின் அளவைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த 'புதிய நிலவு’ தற்காலிகமாக பூமிக்கு அண்மையில் இருப்பதாக சர்வதேச வானியல் ஒன்றியத்தில் உள்ள மைனர் பிளானட் மையம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கண்டுபிடித்துள்ளது.

இந்த ஆய்வு மையமானது சூரிய குடும்பத்திலுள்ள அனைத்து சிறிய கிரக மற்றும் கூடுதல் கிரக பொருட்களை பெயரிடுதல், ஆய்வு செய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இந்தக் கண்டுபிடிப்புடன் தொடர்புடைய விஞ்ஞானிகளுள் ஒருவரான காக்பர் வியர்சோஸ் சமீபத்தில் இந்த ‘புதிய நிலவு’ குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.




அதில், பூமிக்கு அண்மையில் ஒரு புதிய தற்காலிகமான பொருள் அல்லது சிறு நிலவு உள்ளதாகவும் அதற்கு 2020 CD3 என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 15ம் தேதி இரவு, கேடலினா ஸ்கை சர்வேயில் என் அணியிலுள்ள டெடி ப்ரூயினும் நானும், 20வது பரிமாணமுள்ள பருப்பொருளைக் கண்டோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.





சூரிய குடும்பத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் விண்கற்கள் இருப்பதால் இந்தச் சிறு நிலவைக் கண்டுபிடித்தது உண்மையில் ஒரு நினைவுச் சின்னமாக நாங்கள் கருதுகிறோம் என்று அவர் விளக்கினார். மேலும் இது பூமியை சுற்றி வரும் விண்வெளி ஆய்வுகளின் அறியப்பட்ட இரண்டாவது பருப்பொருளாகும். இதற்கு முன்னரும் கூட இதேபோல ‘2006 RH120’ பூமியைச் சுற்றி வந்ததாக அறியப்படுகிறது. அதுவும் கேடலினா ஸ்கை சர்வேயின் கண்டுபிடிப்பாகும்.

இந்தச் சிறு நிலவுகள் அல்லது சிறுகோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருக்க என்ன காரணம்? இது பூமியின் ஈர்ப்பு, சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசையின் கலவையாகும். இந்த விசைகள் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து சந்திரன் அல்லது சிறுகோள்களை ஒரு ஒழுங்கற்ற சுற்றுப்பாதையில் இருக்க வைக்கின்றன.

Also read: பிரபல திரைப்பட இயக்குநர் சுகுமாருடன் இணையும் நடிகர் விஜய் தேவரகொண்டா



சிறு நிலவு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. மேலும் இது அக்டோபர் 2020 முதல் 2021 மே வரை இருக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக வானியலாளர்கள் கூறுகின்றனர். இதுவரை, சிறுகோள் பற்றி தகவல்கள் அதிகம் கண்டறியப்படவில்லை இருப்பினும், அடுத்த ஆண்டில் இது பூமிக்கு அருகில் வரும்போது இதன் உண்மை நிலை தெரியவரும் என்றனர்.

அந்தச் சிறு நிலவு மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று weather.com தெரிவித்துள்ளது. நாசாவில் நியர்-எர்த் ஆப்ஜெக்ட் ஸ்டடிஸ்க்கான மையத்தின் இயக்குநர் பால் சோடாஸ், இந்த கருத்தைக் கூறியுள்ளார். இது சர்வேயர் 2 லூனார் லேண்டர்-செப்டம்பர் 20, 1966-ல் அட்லஸ் சென்டார்-டி ராக்கெட் மூலம் ஏவப்பட்டதாக இருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading