• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • YouTuber: காற்றாலையால் இயங்கும் கார்: இயற்பியலாளரை பந்தயத்தில் தோற்கடித்து $10,000 வென்ற யூடியூபர்!

YouTuber: காற்றாலையால் இயங்கும் கார்: இயற்பியலாளரை பந்தயத்தில் தோற்கடித்து $10,000 வென்ற யூடியூபர்!

காற்றாலையால் இயங்கும் கார்

காற்றாலையால் இயங்கும் கார்

லாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் அலெக்சாண்டர் குசென்கோ அந்த வீடியோவைப் பார்த்தபோது, அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பது தவறானது என்று முல்லருக்கு எழுதினார்.

  • Share this:
காற்றாலை காரை இயக்க முடியுமா? முடியும் என்று சவால் விட்டு, ஒரு ஒப்பந்தம் போட்டார், யூடியூபர் டெரிக் முல்லர். பிளாக்பேர்டின் கொள்கைகளைப் பயன்படுத்தி,வெற்றிகரமாக ஒரு மாடல் வாகனத்தை செயல்படுத்தி காட்டியுள்ளார்.

யூடியூபர் டெரிக் முல்லர் ‘வெரிட்டேசியம்’ என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில், ரிக் கேவல்லாரோவால் வடிவமைக்கப்பட்ட பிளாக்பேர்டு என்ற காற்றி சக்தியால் இயங்கும், காற்று சக்தியை மிஞ்சும் வாகனத்தை காட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் அலெக்சாண்டர் குசென்கோ அந்த வீடியோவைப் பார்த்தபோது, அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பது தவறானது என்று முல்லருக்கு எழுதினார். இயற்பியல் விதிகளை மீறினால் மட்டுமே, முல்லர் கூறிய விதத்தில் பிளாக்பேர்டு வாகனம் செயல்பட முடியும் என்பதில் குசென்கோ உறுதியாக இருந்தார்.

இந்தத் தகவலை அறிந்த முல்லர், குசேன்கோ கூறியது தவறு என்று நிருபிப்பேன் என்று சவாலுக்கு அழைத்து, $10000 (இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்ச ரூபாய்க்கும் மேல்) பந்தயம் கட்டினார். அதனை குசென்கோவும் ஒப்புக்கொண்டார். பிரபல அறிவியல் தொடர்பாளரான நீல் டிகிராசே டைசன் மற்றும் விஞ்ஞானி ஷான் கரோல் ஆகியோர் இந்த பந்தயத்தின் சாட்சி.

சாட்சிகளுடன் ஒரு வீடியோ கூட்டத்தில், ஒரு விளக்கக்காட்சியாக குசென்கோ முல்லரின் கூற்றுகளுக்கு கணக்கீடுகளுடன் தனது மறுப்பை முன்வைத்து, இணையத்தில் வெளியிட்டார். பந்தயத்தின் ஒப்பந்த உடன்படிக்கையின் படி, முல்லர், பிளாக்பேர்டின் அதே கொள்கைகளில் வேலை செய்யும்ஒரு மாடல் வாகனத்தை வெற்றிகரமாக நிரூபிக்க வேண்டியிருந்தது.

​​ஜூலை 1, வியாழக்கிழமை, முல்லர் தனது சேனலில், தான் பந்தயத்தை வென்றதாகவும், குசென்கோ $10,000 தொகையை அவருக்கு அனுப்பியுள்ளார் என்றும் ஒரு வீடியோவில் தெரிவித்தார். முந்தைய வீடியோவில் அவர் முன்வைத்த சான்றுகள் "உறுதியானவை அல்ல" என்றும் அவர் ஒப்புக்கொண்டார், ஏனென்றால் சந்தேகத்திற்கு இடமான மற்றொரு முரண்பாடான விளக்கம் இருந்தது. எனவே, அது குசென்கோ தான் கூறியதை விமர்சிக்கும் வகையில் இருந்தது என்றும் தெரிவித்தார்.

மேலும் வீடியோவில், பிளாக்பேர்ட் போன்ற அதே கொள்கைகளில் செயல்படும் இரண்டு வாகனங்களை, முல்லர் வெற்றிகரமாக நிரூபித்தார். வாகனத்தால் காற்றை மிஞ்ச முடிந்தது, ஏனெனில் நகரும் சக்கரங்களால் இயக்கப்படும் அதன் புரொப்பல்லர் ஃபேன், காற்று அதைத் தள்ளும் திசையின்எதிர் திசையில் இயங்குகிறது. இதன் விளைவாக, புரொப்பல்லர் ஃபேன், சக்கரங்களிலிருந்து கூடுதல் சக்தியைப் பயன்படுத்தலாம், இது, காற்றில் வரைந்து கொண்டிருந்தது.

Also read... Mars: செவ்வாய் கிரக மேற்பரப்பில் காணப்பட்டவை உண்மையான ஏரிகள் அல்ல - ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு!

இதையொட்டி, இந்த கூடுதல் உந்துதலைப் பெற்று, இறுதியில் காற்றை விட வேகத்தை அதிகரிக்கும்போது, வாகனம் இயங்கும் வேகம் அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு சராசரி எடை குறைவான குழந்தை ஸீ-சாவில் நீண்ட நேரம் உட்கார்ந்தால், உங்களை உயர்த்த முடியும். பிளாக்பேர்டும் அதே போல வேலை செய்கிறது.

சக்கரங்களை விட மிக உயரமாக இருப்பதன் மூலம், காற்றாலை சக்திகளை விட ஃபேன் எதிர் திசையில் சுழற்றுவதற்கு போதுமான கூடுதல் சக்தியை அடைய முடிகிறது, இதனால் கூடுதல் உந்துதல் கிடைக்கிறது, என்று முல்லர் கூறினார். சவாலில் தான் வென்ற பணத்தை, அறிவியல் தகவல்தொடர்பு போட்டியை நடத்துவதற்கு செலவிடப்போவதாக முல்லர் தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: