ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த ஹோட்டலுக்கு சென்று 'நன்றி', 'ப்ளீஸ்' என்று சொன்னால் உங்களுக்கு சிறப்பு தள்ளுபடி நிச்சயம்

இந்த ஹோட்டலுக்கு சென்று 'நன்றி', 'ப்ளீஸ்' என்று சொன்னால் உங்களுக்கு சிறப்பு தள்ளுபடி நிச்சயம்

தள்ளுபடி தரும் உணவகம்

தள்ளுபடி தரும் உணவகம்

ஹைதராபாத்திலுள்ள ஒரு உணவகத்தில் நன்றி, ப்ளீஸ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஒரு பொருள் உடனடியாக விற்று தீர வேண்டுமென்றால் அதற்கு தகுந்த வணிக யுக்திகளை பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இது போன்ற வணிக யுக்திகளை நாம் பெரும்பாலும் பல இடங்களில் பார்த்திருப்போம். சாதாரண தெரு கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை இது போன்ற வழிகளை அடிக்கடி பார்க்க நேரிடும். எந்த ஒரு பொருளுக்கும் சிறப்பு தள்ளுபடியை வழங்கினால், அது உடனடியாக விற்று விடும். அந்த பொருளை வேறு யாராவது வாங்கி விடுவதற்கு முன்னராக, தான் அதை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுவதற்கே இந்த சிறப்பு தள்ளுபடி வேலை செய்கின்றன.

வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது முதல் ஆடைகள் வரை எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட சிறப்பு தள்ளுபடிகளை காண முடியும். இந்த வணிக யுக்தியை உணவகங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். இது தற்போதைய புதிய ட்ரெண்டாகவும் உள்ளது. சில உணவகங்கள் இந்த யுக்தியை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இவ்வளவு உணவு சாப்பிட்டால் அதற்கான பணத்தை தர வேண்டியதில்லை. இல்லையேல் சாப்பிட்ட உணவிற்கான பணத்தை கொடுக்க வேண்டும் போன்ற சிறப்பு போட்டிகள் கூட பல காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

அதே போன்று சில ஹோட்டல்கள் இத்தனை புஷ் அப்ஸ் செய்தால் அதற்காக குறிப்பிட்ட அளவு சிறப்பு தள்ளுபடி தருவது போன்ற விளம்பரங்களை செய்து வருகின்றன. மேலும் சாப்பிட்ட பிறகு இவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டினால் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி தருவதாகவும் புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த உணவகம் ஒன்றில் இப்படிப்பட்ட புதிய வியாபார தந்திரத்தை பின்பற்றி வருகின்றனர். இது தற்போது பலரையும் கவர்ந்து வருகிறது.

தக்ஷின் 5 என்கிற ஹைதராபாத்தை சேர்ந்த உணவகத்தில் சென்று 'ப்ளீஸ்' 'நன்றி' 'வாழ்த்துக்கள்' போன்ற நல்ல வார்த்தைகளை பயன்படுத்தினால் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவு வகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். உதாரணத்திற்கு இங்கு சென்று வெஜ் மீல்ஸ் ஒன்று ஆர்டர் செய்தால் உங்களுக்கு 15 ரூபாய் தள்ளுபடி தருவார்கள். அதாவது இதன் உண்மையான விலை ரூ.165-இல் இருந்து ரூ.15 குறைத்து ரூ.150-க்கு பெற்று கொள்ளலாம். இப்படியொரு சிறந்த வழியை இதுவரை யாரும் பயன்படுத்தியது இல்லை.

சசிகலாவை அ.தி.மு.கவில் இணைத்துக் கொள்வீர்களா? செய்தியாளர் கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில்

இந்த புதுமையான வழிமுறையை பலர் பாராட்டி வருகின்றனர். அதே போன்று மற்ற உணவகங்களும் இது போன்ற வியாபார யுக்தியை செய்ய முன் வந்துள்ளனர். இந்த புதிய வழிமுறை குறித்து தக்ஷின் உணவக உரிமையாளர்களிடம் கேட்டபோது சிலவற்றை பகிர்ந்து கொண்டனர். 'இன்றைய உலகில் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சின்ன சின்ன நற்பண்புகள் மிகவும் அரிதாக தென்படுகிறது. இது வெளிக்கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த புதிய முயற்சியை நாங்கள் தொடங்கினோம்." என்று குறிப்பிட்டனர். மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்ட இந்த வணிக யுக்தி உண்மையில் சிறந்த ஒன்றாகும்.

First published: