Home /News /trend /

அமைதியை தேடி 43 ஆண்டுகளில் 53 திருமணங்களை செய்த சவுதி தொழிலதிபர்!

அமைதியை தேடி 43 ஆண்டுகளில் 53 திருமணங்களை செய்த சவுதி தொழிலதிபர்!

சவுதி தொழிலதிபர்

சவுதி தொழிலதிபர்

திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை எனக் கூறி, அடுத்தடுத்த திருமணங்களில் அந்த நிம்மதி கிடைக்குமா என்ற தேடலுடன் பயணித்த சவுதியை சேர்ந்த விநோத மனிதர் பற்றி பார்க்கலாம்.!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Inter, Indiasaudi arabiasaudi arabiasaudi arabia
    திருமண வாழ்க்கை என்பது பல ஏற்ற, இறக்கங்களை கொண்டது. ஒரு சமயம் மகிழ்ச்சிகரமானதாகவும், மற்றொரு சமயம் வெறுப்பு உடையதாகவும் தோன்றும். அதிலும் திருமண வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக நிம்மதியை இழந்துவிட்டதாக கூறுபவர்களும் உண்டு.

    அதிலும் குறிப்பாக பலதார திருமணங்கள் குறித்த பேச்சு, விவாதம் எழுகிறபோது, ஒரு மனைவியை கட்டியதற்கே இங்கு நிம்மதி இல்லாமல் போய்விட்டது என்று ஆண்கள் சலிப்பாக சொல்வது உண்டு. ஆனால், திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை எனக் கூறி, அடுத்தடுத்த திருமணங்களில் அந்த நிம்மதி கிடைக்குமா என்ற தேடலுடன் பயணித்துள்ளார் சவுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

    இவர் 2, 3 திருமணங்களோடு நிற்கவில்லை. கடந்த 43 ஆண்டுகளில் 53 திருமணங்களை செய்துள்ளார். அமைதி மற்றும் நிரந்தரமான வாழ்க்கையைத் தேடியே இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ள அவர், தனிப்பட்ட சுகத்திற்காக இதை செய்யவில்லை என்று தெரிவிக்கிறார்.

    Read More: வயதான காலத்தில் தனது கணவரை பைக்கில் அழைத்து சென்ற பெண் - வைரலாகும் வீடியோ!

    20 வயதில் முதல் திருமணம்

    அபு அப்துல்லா என்ற அந்த நபருக்கு, அவரது 20ஆவது வயதில் முதல் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண் அவரை விட 6 வயது மூத்தவர். இதற்கடுத்த 52 திருமணங்களில் ஒருசில திருமணமெல்லாம் ஒருநாள் இரவுடன் முடிந்து போயிருக்கிறது. இந்த நூற்றாண்டின் பலதார மணநாயகன் என்று இவரை ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

    இதுகுறித்து அப்துல்லா கூறுகையில், “முதல் திருமணம் செய்யும்போது, வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், சில ஆண்டுகளில் பிரச்சினைகள் உருவானது. எனக்கு 23 வயது இருக்கையில், இரண்டாவது திருமணம் செய்ய விரும்புவதை என் மனைவியிடம் தெரிவித்தேன்.

    விரக்தியே மிச்சம்

    வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டும் என்ற தேடலுக்கு தீர்வு தருவதாக இரண்டாம் திருமணம் அமையவில்லை. இரண்டு மனைவிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் விவாகரத்து செய்துவிட்டு 3ஆவது மற்றும் 4ஆவது திருமணங்களை செய்து கொண்டார். ஆனால், இங்கு நிம்மதி இல்லாமல் போக, ஒவ்வொருவராக விவாகரத்து செய்து, அடுத்தடுத்த திருமணங்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர்.

    Read More: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பிறந்த அழகான குழந்தை..!- மருத்துவ மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்

    வெளிநாட்டு பெண்களுடனும் திருமணம்

    அப்துல்லா திருமணம் செய்த பெரும்பாலான பெண்கள் சவுதியைச் சேர்ந்தவர்கள்தான். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்கையில் ஒரு சில வெளிநாட்டு பெண்களையும் திருமணம் செய்துள்ளார்.

    இத்தனை மனைவிகளை திருமணம் செய்திருந்தாலும், தற்போது ஒரேயொரு மனைவியுடன்தான் அப்துல்லா வாழ்ந்து வருகிறாராம். இனி திருமணம் செய்யும் எண்ணமும் இல்லையாம்.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Business, Divorce, Marriage, Saudi Arabia

    அடுத்த செய்தி