Home /News /trend /

சதுரங்க வல்லபநாதர்... திருவாரூரில் செஸ் விளையாட்டிற்கு தொடர்புடைய ஒரு கோவில் !

சதுரங்க வல்லபநாதர்... திருவாரூரில் செஸ் விளையாட்டிற்கு தொடர்புடைய ஒரு கோவில் !

சதுரங்க வல்லபநாதர்

சதுரங்க வல்லபநாதர்

Temple on chess: ஜூலை 28 அன்று உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புகள், விளம்பரங்கள் எல்லாம் உலக அளவில் மக்களை ஈர்த்து வருகிறது.

ஜூலை 28 அன்று உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புகள், விளம்பரங்கள் எல்லாம் உலக அளவில் மக்களை ஈர்த்து வருகிறது. சென்னையின் அடையாளமான நேப்பியர் பலம் சதுரங்க மேடையாக வண்ணமடிக்கப்பட்ட நிலையில் இப்போது ஒரு புதிய இடம் மக்களின் ஆர்வத்தை பெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள திருப்பூவனூரில் உள்ள பழமையான சிவன் கோயில் செஸ் விளையாட்டுடன் தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலின் முதன்மைக் கடவுள் சதுரங்க வல்லபநாதர், சதுரங்கத்தில் வல்லுனர் என்று அழைக்கப்படுகிறார். சதுரங்கம் என்பது செஸ் என்பதன்  தமிழ் பெயர். பார்வதியின் அவதாரத்தைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை சதுரங்கம் விளையாடி பெற்றதால் சிவபெருமான் சதுரங்க வல்லபநாதர் என்று அழைக்கப்பட்டார் என்று புராணம் கூறுகிறது.

வாசுதேவன் ஒரு சிற்றரசன் திருநெல்வேலியில் குழந்தைக்காக இறைவனை வேண்டி  மகளை ஈன்றெடுத்தார். இளவரசி, ராஜராஜேஸ்வரி, பார்வதி தேவியின் அவதாரம் என்று நம்பப்படுகிறது. அவரோடு தேவா லோகத்தின் 7 தாய்களில் ஒருவரான சாமுண்டேஸ்வரியும் பார்வதிக்கு சேவை செய்ய பிறந்துள்ளார். தன் மகள் சதுரங்கத்தில் மேதையாக இருந்ததால், தன் மகளை விளையாட்டில் தோற்கடிப்பவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக அரசன் அறிவித்திருந்தான். அவளை யாராலும் வெல்ல முடியாததால், கவலைப்பட்ட ஒரு அரசன் சிவபெருமானிடம் வேண்டினான். 

சிவன் ஒரு முதியவர் வேடத்தில் தோன்றி, விளையாட்டில் ராஜராஜேஸ்வரியை தோற்கடித்து, பின்னர் தேவியை திருமணம் செய்து கொள்ள தனது மாறுவேடத்தைக் களைந்ததாகக் கூறப்படுகிறது.  தமிழ்நாட்டில் ராஜராஜேஸ்வரிக்கு தாதியாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சாமுண்டீஸ்வரிக்கான அரிய சன்னதியும் இக்கோயிலில் உள்ளது. தமிழ் சைவப் புலவர் திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ள கோயிலைப் போற்றிப் பாடியுள்ளார்.

செஸ் போர்டாக மாறிய சென்னை நேப்பியார் பாலம்.. குவியும் பார்வையாளர்கள்

முக்கிய தெய்வத்தின் விமானம் 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுகள் கூறுகிறது. 1946-47 இல் மைசூரில் உள்ள கல்வெட்டுத் துறையால்  இந்த கோவிலின் 11 கல்வெட்டுகள் கோயிலிலிருந்து நகலெடுக்கப்பட்டுள்ளன. அவை தோராயமாக 13 முதல் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை மற்றும் பிற்கால பாண்டியர்கள் மற்றும் விஜயநாயக்கர் மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை என்றும் கூரப்படுகிறது. பெரும்பாலான கல்வெட்டுகள் துண்டு துண்டாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ உள்ளன, மேலும் அவை பெரும்பாலும் அறநிலையங்கள் தொடர்பானவை" என்று திருச்சி டாக்டர் எம். ராஜமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குனர் ஆர். கலைக்கோவன் கூறினார். 

 ‘1,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சதுரங்கம் விளையாடியதாக கோயில் ஆவணங்கள் உள்ளன. சில சிறிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தாலும், அதன் ஆரம்ப வடிவங்களில் சதுரங்கம் இந்தியாவில் தோன்றி ஐரோப்பாவிற்குப் பயணித்தது’ என்று ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறினார். நம் நாடு முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதால், கோவிலின் பாரம்பரியம் மற்றும் விளையாட்டுடன் தமிழகத்தின் வரலாற்று தொடர்பை முன்னிலைப்படுத்த இது ஒரு வாய்ப்பாகும், என்றார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Chess, Chess Olympiad 2022, Thiruvarur

அடுத்த செய்தி