ட்விட்டரில் ட்ரெண்டாகும் ’#SareeTwitter’... அப்படி என்ன சிறப்பு...?

எவ்வளவோ ஃபேஷன் புதுமைகள் வந்தாலும் புடவை மீதான ஈர்ப்பு என்றுமே காலத்தால் அழிக்க முடியாது என்பதற்கு இந்த ஹேஷ் டாக் டிரெண்டே சாட்சி.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ’#SareeTwitter’... அப்படி என்ன சிறப்பு...?
புடவை
  • News18
  • Last Updated: July 16, 2019, 6:27 PM IST
  • Share this:
இன்றையக் காலப்போக்கில் புடவை மட்டுமல்ல பாரம்பரியம் , கலாச்சாரம் என்று எதை பேசினாலும் அது டிரெண்ட் ஆகும். பழமையை மறந்து வரும் கால கட்டம் என்பதால் சற்று உசுப்பேத்திவிட்டால் போதும் 90 கிட்ஸ் அலப்பறைகள், புலம்பல்களை சொல்லி மாளாது.

ஆனால் இந்த சாரீ ட்விட்டரில் 90 கிட்ஸ் மட்டுமல்ல 80 கிட்ஸுகளும் இடம் பெற்றுள்ளனர். அதாவது நேற்று பெயர் தெரியாத ட்விட்டர் கணக்களர் தான் புடவைக் கட்டியதை நண்பர்களுக்குப் பகிர்வதர்காக ’ #SareeTwitter ’ என்றுக் குறிப்பிட்டுப் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். பின் அவரின் நண்பர்கள் பகிர அது அப்படியே இந்தியா முழுவதும் பரவி விட்டது.

தற்போது அந்த ’ #SareeTwitter ’ ஹாஷ்டாக் கேங்கில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நக்மா, பா.ஜ.க நுபுர் ஷர்மா , பிரபல ஊடகவியலாளர் பர்கா தத் , எம்.பி யாகக் கலக்கும் காங்கிரஸ் கட்சியின் ரக்‌ஷ்மணி குமாரி என இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் புடவைக் கட்டிகொண்டு ஐ லவ் சரீ மற்றும் புடவைக் கட்டுவதை பெருமையாக உணர்கிறேன் என்று ஸ்டேட்டஸ் பதிவிட்டு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.


அதேபோல் ஆண்களும் தன் அம்மா, மனைவி , தோழி, சகோதரி என அவர்கள் விரும்பும் பெண்களின் புடவை கட்டிய புகைப்படத்தைப் போட்டு அவர்களைப் பற்றி குறிப்பும் எழுதி ஹேஷ் டேக்கை பதிவு செய்கின்றனர்.

இஸ்ரேல் இந்தியாவின் உறவை பலப்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் கணக்கிலும்  ”புடவை இந்தியாவின் பாரம்பரியம், இது பலமான ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் புடவை மட்டும்தான். பெண்கள் இதை அணிந்தால் ஸ்டைலிஷாகவும், மிக அழகாகவும் இருப்பார்கள்”  என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.இது ஹேஷ்டேக் என்பதைத் தாண்டி ஒவ்வொருவரும் புடவை மீது வைத்துள்ள விருப்பத்தையே காட்டுகிறது.

எவ்வளவோ ஃபேஷன் புதுமைகள் வந்தாலும் புடவை மீதான ஈர்ப்பு என்றுமே காலத்தால் அழிக்க முடியாது என்பதற்கு இந்த ஹேஷ்டாக் டிரெண்டே சாட்சி. அதை உணர்த்தவே இந்த டிரெண்ட். நேற்று முதல் இந்த ஹேஷ் டேக் ட்விட்டரில் சீறிக்கொண்டிருக்கிறது.First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்