சேலை கட்டிய மணமகன்; பேண்ட் சட்டையில் மணமகள்...பாரம்பரியமாக நடைபெற்ற விநோத திருமணம்

சேலை கட்டிய மணமகன்; பேண்ட் சட்டையில் மணமகள்

பாரம்பரியமாக பின்பற்றப்படும் இந்த நடைமுறையை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர்.

 • Share this:
  மணமகள், மணமகன் கோலத்திலும், மணமகன், மணமகள் கோலத்திலும் அலங்காரம் செய்து கொண்டு திருமணம் செய்த வினோத நிகழ்வு ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

  ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செர்லோபள்ளி கிராமத்தில் இந்த அதிசய திருமணம் நடைபெற்றது. இந்தப் பகுதியில் உள்ள மர்காபுரம் , தரிமடுகு, அர்த்தவீடு ,கம்பம் உள்ளிட்ட சில கிராம மக்கள் தங்கள் குல முறைப்படி திருமண நாளில் மணமகன், மணமகள் கோலத்திலும் மணமகள் மணமகன் கோலத்திலும் உடை அணிந்து குலதெய்வ கோவில் முன்பாக திருமணம் செய்து கொள்வது வழக்கம்.  மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் தன்னுடைய திருமண நாளில் வழக்கத்தில் உள்ள நடைமுறையின்படி பெண் வேடமிட்டு ஆண் வேடத்தில் இருக்கும் மணமகளுக்கு தாலி கட்ட வேண்டும்.  பாரம்பரியமாக பின்பற்றப்படும் இந்த நடைமுறையை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: