Home /News /trend /

இப்படியெல்லாம் நடக்குமா? வாடிக்கையாளரின் அக்கவுண்ட்டில் ரூ. 1,310 கோடி பணத்தை டெபாசிட் செய்த வங்கி!

இப்படியெல்லாம் நடக்குமா? வாடிக்கையாளரின் அக்கவுண்ட்டில் ரூ. 1,310 கோடி பணத்தை டெபாசிட் செய்த வங்கி!

பணம்

பணம்

Santander பேங்க் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தவறுதலாக வாடிகையாளர்களின் வங்கி கணக்கில் சுமார் ரூ.1,310 கோடி டெபாசிட் செய்யப்பட்டு விட்டது

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் தினத்தன்று, யுனைட்டட் கிங்டம்மை சேர்ந்த பிரபல பேங்க்கான Santander, வாடிக்கையாளர்களுக்கு பணமழையை பரிசாக பொழிந்துள்ளது.

    கடந்த டிசம்பர் 25 அன்று வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்களுக்கு மொத்தம் 130 மில்லியன் பவுண்டுகளை அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1,310 கோடி பணத்தை மாற்றியது. ஐரோப்பிய வங்கியான Santander சுமார் 75,000 ட்ரான்சாக்ஷன்களில், இந்த 130 மில்லியன் பவுண்டுகளை தனது வாடிக்கையாளர்களின் பேங்க் அக்கவுண்ட்களில் டெபாசிட் செய்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று மிகவும் ஆச்சரியமான பரிசை பெற்றனர்.

    பலர் தங்களது ஊதியத்தை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் எதிர்பார்த்ததை விட பணம் இரட்டிப்பாக வந்திருந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் குழப்பம் அடைந்தனர். எனினும் அக்கவுண்ட் வைத்திருப்பதற்காகவா கிறிஸ்துமஸ் தின பரிசாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று எண்ணி பல வாடிகையாளர்களும் ஆச்சர்யத்துடன் குழப்பமும் அடையாமல் இல்லை.. மேலும் இது பல ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் ஆனது.

    பிறகு தான் தெரிய வந்தது Santander பேங்க் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தவறுதலாக வாடிகையாளர்களின் வங்கி கணக்கில் சுமார் ரூ.1,310 கோடி டெபாசிட் செய்யப்பட்டு விட்டது என்று. Santander பேங்க் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி பல UK வங்கிகளில் உள்ள அக்கவுண்ட்களுக்கும் பணம் செலுத்தப்பட்டதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, இப்போது அந்த பணத்தை திரும்பப் பெறுமாறு Santander பேங்க்  கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அடிக்கடி எழும் சந்தேகம்!

    இது தொடர்பாக தகவல் தெரிவித்து உள்ள Santander பேங்க், U.K-ல் உள்ள 2,000 பிசினஸ் அக்கவுண்ட்களில் இருந்து பேமென்ட்ஸ் 2 முறை ப்ராசஸ்டு ஆகியதால் இந்த தவறு நிகழ்ந்துள்ளதாக குறிபிட்டு இருக்கிறது. இந்த தவறு மூலம் சில ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை இரட்டிப்பாக பெற்றனர். அதே நேரத்தில் சப்ளையர்களும் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பெற்றனர். scheduling issue ஏற்பட்டதன் காரணமாகவே டூப்ளிகேட் பேமென்ட்ஸ் செய்யப்பட்டதாகவும் வங்கி விளக்கம் அளித்து உள்ளது. அது இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.]

    இதையும் படிங்க.. SBI பேங்கில் இருக்கும் சூப்பரான சேமிப்பு திட்டத்தில் இதுவும் ஒன்று!

    இது தொடர்பாக மேலும் விளக்கம் அளித்து உள்ள Santander பேங்க், கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் செய்யப்பட்ட டூப்ளிகேட் பேமென்ட்ஸ் வங்கியின் சொந்த கையிருப்பில் இருந்து சென்ற பணமே. அதாவது நிறுவனங்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து வெளியேறவில்லை என்று வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது. வரும் நாட்களில் தவறுதலாக செய்யப்பட்ட டூப்ளிகேட் பேமென்ட்ஸ்களை மீட்டெடுக்க இங்கிலாந்து முழுவதும் உள்ள பல வங்கிகளுடன் தீவிரமாக உழைக்க உள்ளதாகவும், பேமென்ட்ஸ்களில் ஊதியம் மற்றும் சப்ளையர்களுக்கான பேமென்ட்ஸ்களும் அடங்கும் என்று Santander பேங்க் கூறி இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Bank accounts, UK

    அடுத்த செய்தி