ஆர்டர் செய்த சமோசாவை பார்த்து ஷாக்கான நபர்- ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்!

சமோசா

சமோசா பார்ட்டி என்ற கடையில் ஆன்லைனில் சமோசா வாங்கிய நபர் அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
வித்தியாசமான தயாரிப்புகளை அடையாளம் காணும்போது வரிசை எண்கள் மிகவும் முக்கியம். ஆனால் சமோசாவிற்கு சீரியல் எண்கள் தேவை என நீங்கள் எப்போதாவது நினைத்தது உண்டா? சீரியல் எண்கள் கொண்ட சமோசா புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சமோசா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது. மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் தெரு உணவுகளில் சமோசாவும் ஒன்று, வெங்காயம், உருளைக்கிழங்கு, சிக்கன் , காளான் என பல்வேறு வெரைட்டிகளில் சமோசாக்கள் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு ட்விட்டர் பயனர் சமோசாவை ஆன்லைனில் ஆர்டர் செய்தபோது, ​​அவருக்கு சீரியல் எண் கொண்ட சமோசா அனுப்பப்படும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

நிதின் மிஸ்ரா என்ற யூசர் சமீபத்தில் ட்விட்டரில் ஷேர் செய்த புகைப்படம் ஒன்றில் சமோசாவில் ஒரு சீரியல் எண்கள் உள்ளது. "நான் ஆர்டர் செய்த சமோசாக்களில் சீரியல் எண்கள் இருந்தன, தொழில்நுட்ப வல்லுநர்கள் என் ஹல்வாயிலிருந்து விலகி இருக்க முடியுமா” என குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை நிதின் மிஸ்ரா ஷேர் செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் இரண்டு சமோசாக்கள் சீரியல் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

 செப்டம்பர் 1 அன்று ட்விட்டரில் இந்த புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்ட நிலையில், ஏராளமானோர் இதனை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். சட்னிகளைப் பதிவிறக்குவதற்கான QR குறியீடுகள் போன்று இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று பலர் ஆச்சரியப்பட்டனர்.

Also Read:  இது என்ன கொடுமை.. காதலியின் காதில் உடலுறவு கொண்ட காதலன் – படுகாயத்துடன் இளம்பெண் அவதி

இதுவரை 12,000 பேர் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ள நிலையில், இதுகுறித்து ஏராளமானோர் சுவாரஸ்யமாக கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர். பல உணவகங்களில் இது ஒரு பொதுவான அம்சமாகும் என்று ஒருவர் கூறியுள்ளார்.

சமோசா


சமோசா பார்ட்டி என்ற கடையில் தான் இந்த சமோசா வாங்கியதாக யூசர் குறிப்பிட்டுள்ளார். பலர் உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை எப்படி விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினர். ஒருவர் "இது பயமாக இருக்கிறது - அடுத்து என்ன QR குறியீட்டைக் கொண்ட ரஸ்குல்லாவா?" என வேடிக்கையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்விட்டர் பயனரைப் பகிர்ந்துள்ளார். "தொழில்நுட்பம் கொண்ட சமோசா" என்று இன்னொருவர் கேலி செய்துள்ளார். மற்றொருவர் "அப்படியானால், அடுத்து என்ன? பெங்காலி மார்க்கெட்டில் குலாப் ஜாமுன் மற்றும் ஜலேபி மீது பார்கோடு வருமா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை சமோசா உண்மையானதா இல்லையா என்பதை அறிய இந்த சீரியல் எண்கள் உதவுமோ? என ஒரு கேட்டுள்ளார். இதுபோல பலரும் தங்களது வேடிக்கையான கருத்துக்களை ஷேர் செய்து வருகின்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: