டுட்டுமோன் - சஹானா திருமணம்..! - நெட்டிசன்ஸ் வாழ்த்திய நெகிழ்ச்சி காதல்..!

டுட்டுமோன் - சஹானா திருமணம்..! - நெட்டிசன்ஸ் வாழ்த்திய நெகிழ்ச்சி காதல்..!
டுட்டுமோன் - சஹானா திருமணம்
  • Share this:
திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் டுட்டுமோன் என்கிற பிரணவ். 27 வயதான பிரணவ், சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பெரிய விபத்தைச் சந்தித்திருக்கிறார். அந்த ஒரு சம்பவம் அவரை முற்றிலும் முடக்கியது.

மனதாலும் மிகப்பெரிய முடக்கத்தை உணர்ந்துள்ளார் பிரணவ். வீல்சேரின் உதவியிலேயேதான் வாழ முடியும் என்ற நிலை அவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை அளித்திருக்கிறது. அவருக்கு குறைகள் எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது பிரணவ்வின் அன்புக்குடும்பம்.
வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் அவர், அதையே தனது தொழில்முறையாக மாற்றி, தற்போது, மிகப்பெரிய கட்சி ஒன்றின் தகவல் தொழில்நுட்பத்துறைப் பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். சில வருடங்களாக சஹானா என்ற பெண்ணைக் காதலித்து வந்த பிரணவவுக்கு, தனது உடல் குறைபாட்டைக் குறித்த பாதுகாப்பின்மை அவ்வப்போது இருந்திருக்கிறது.

எந்த விதத்திலும் குறையற்ற பிரணவ்வின் காதலை உணர்ந்துகொண்ட சஹானா, காதலைத் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதித்துவிட்டார். பிரணவ் - சஹானாவின் காதல் வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாகவும், எதிர்பார்த்த ஒரு ஜோடி காதலில் இணைந்ததால் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கொண்டாடி ஸ்டேடஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

Also See..
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading