ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இதென்னடா புதுசா இருக்கு... அழுமூஞ்சியாக மாற அவ்வளவு ஆசையா.?

இதென்னடா புதுசா இருக்கு... அழுமூஞ்சியாக மாற அவ்வளவு ஆசையா.?

(AFP image)

(AFP image)

Sadfishing | சோசியல் மீடியாவில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு எடுக்கப்படும் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறதாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சோசியல் மீடியாக்களில் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் விநோதமாக இருந்து பார்த்திருப்போம். இப்போது அதிகரித்து வரும் சோசியல் மீடியா மோகத்தை தக்கவைத்து, தனது யூஸர்களுக்கு அதிக பாலோயர்களை பிடித்துக் கொடுப்பதற்காக சோசியல் மீடியா ஆப்களே புதிது, புதிதாக ஆப்ஷன்கள், பில்டர்களை கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.

ஆம், இன்ஸ்டாகிராமைப் போல் யூஸர்கள் அதிக அளவில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யும் தளமாக ஸ்நாப்ஷாட் உள்ளது. இந்த ஆப் தனது யூஸர்களுக்காக கிரையிங் ஃபேஸ் ( crying face), அதாங்க அழுமூஞ்சி என்றொரு பில்டரைக் கொண்டு வந்துள்ளது. சமீபகாலமாக சோசியல் மீடியாவில் மகிழ்ச்சியான பதிவுகளை விட சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு எடுக்கப்படும் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறதாம்.

இந்த யுக்தி சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு அதிக பாலோயர்களை பெற்றுத்தருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு விஷயம் ட்ரெண்டானால் சோசியல் மீடியாக்கள் சும்மா விடுமா?, உடனே ஸ்நாப்ஷாட் ஆப்பில் கிரையிங் ஃபேஸ் என்ற பில்டரை அறிமுகப்படுத்தியுள்ளனர். சூப்பர் மாடல் மற்றும் பிரபல நடிகையான பெல்லா ஹடிட் கடந்த நவம்பரில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான முகத்துடன் பகிர்ந்த செஃல்பி போட்டோக்கள் தாறுமாறு வைரலானது.

சோசியல் மீடியா உண்மையானது அல்ல என்பது பற்றி அவர் பகிர்ந்த அந்த பதிவும், போட்டோஸும் உலக அளவில் வேகமான ரெஸ்பான்சகளை பெற்றது. 50 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்ட அவரது ஒற்றை பதிவு, 2.5 மில்லியன் லைக்குகள், 23 ஆயிரம் கமெண்ட்களை குவித்தது.
 
View this post on Instagram

 

A post shared by Bella 🦋 (@bellahadid)நம்பகத்தன்மையை நாடுதல்:

சமீபகாலமாக ஸ்நாப்ஷாட், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சோசியல் மீடியாக்களில் சிரிப்பு மற்றும் நகைச்சுவையை விட சோகமான பதிவுகள் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. பிரேக்அப், மரணம் அல்லது வேறு ஏதாவது சோகமான விஷயங்கள் பற்றி பகிரப்படும் பதிவுகள் சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட நபரை பின்தொடர்பவர்களிடம் இருந்து அனுதாபமான கமெண்ட்களையும், லைக்குகளையும் குவிக்கிறது. இதற்கு 'sadfishing' என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

Also Read : பேருந்தை தாக்க முயன்ற ஒற்றை காட்டு யானை! - வைரல் வீடியோ

2019 ஆம் ஆண்டில் 'sadfishing' என்ற சொல்லை பத்திரிகையாளர் ரெபேக்கா ரீட் என்பவர் உருவாக்கினார். இது சோகத்தை பற்றியது அல்ல, சோசியல் மீடியாக்களில் சோகம் தொடர்பான பதிவுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை குறிப்பது ஆகும். அடீல், டிராவிஸ் ஸ்காட் மற்றும் கெண்டல் ஜென்னர் போன்ற பல பிரபலங்களும் கிரையிங் ஃபேஸ் டெக்னிக்கை தங்களது சோசியல் மீடியா பதிவுகளில் பயன்படுத்தியுள்ளனர்.

ஸ்நாப்ஷாட்டில் TEARFUL பில்டர்:

சோசியல் மீடியாவில் அழத் தெரியாத அல்லது அழுது நடிக்கத் தெரியாத நபர்களுக்காக ஸ்நாப்ஷாட் TEARFUL என்ற பில்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பயன்படுத்தினால் யூஸர் தங்களது சோகமான பதிவிற்கு அழுதுவது போன்ற போட்டோவை உருவாக்க முடியும். இந்த பில்டரை ஆன் செய்து விட்டு செல்போன் கேமரா முன்பு அமர்ந்து எவ்வளவு சிரிக்கிறீர்களோ, அது அப்படியே அழுகையாக மாற்றப்படும். இதன் மூலமாக நீங்கள் நிஜமாக அழுது, கண்ணீர் சிந்தி போட்டோ எடுக்க வேண்டிய அவசியத்தையும் ஸ்நாப்ஷாட் குறைத்துவிட்டது.

Also Read : 5 நாட்களுக்கு மட்டும் இந்த வேலையை பாத்தா போதும், ஐந்து லட்சம் சம்பளமாம்!

இப்படி லைக்குகளை குவிப்பதற்காக பல போலியான விஷயங்கள் சோசியல் மீடியாவில் வைரலாவதால் எது நிஜம், எது பொய் என தெரியாமல் யூஸர்கள் குழப்பிப்போயுள்ளனர். இதேநேரத்தில் 'sadfishing' முறையை பயன்படுத்தி, சோகமான வீடியோக்களைக் கண்டறிய நெட்டிசன்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட #divorce மற்றும் #anxiety என்ற ஹேஷ்டேக்குகள் இன்று முறையே 7 மற்றும் 14 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Social media, Trending