கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும், சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் பகர்ந்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவிற்கு ரியாக்ட் செய்துள்ளனர். தொடர்ந்து தங்கள் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கும் தன்னுடைய கமெண்ட்டைப் பகிர்ந்துள்ளார்.
அவர் மட்டுமின்றி, பல பிரபலங்களும் அந்த வீடியோவைப் பார்த்து வியந்து ரியாக்ட் செய்து, எமோஜிக்களை வாரி வழங்கி வருகின்றனர். லட்சக்கணக்கான யூசர்களின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமில்லாமல், பாலிவுட் பிரபலங்கள் கவனத்தையும் கவர்நது, தொடர்ந்து வைரலாகி வரும், சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த வீடியோவில் என்ன இருந்தது?
சச்சின் பகிர்ந்த அந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். "இந்த வீடியோவை என்னுடைய நண்பனிடமிருந்து பெற்றேன். இதைப் பார்த்தவுடன் நம்பவே முடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தது, வியப்பூட்டுகிறது. இந்தச்சிறுவனுக்கு விளையாட்டின் மீது இந்த சிறுவனின் காதலும், ஆர்வமும் வெளிப்படையாகத் தெரிகிறது" என்று தனது இன்ஸ்டாகிராம் போஸ்டின் கேப்ஷனில் தெரிவித்திருந்தார்.
சின்ன சின்ன வீடியோ கிளிப்புகளின் தொகுப்பாக ஒரு சிறுவன் பவுலிங் போடும் காட்சிகள் அந்த வீடியோவில் காணப்படுகிறது. மொத்த வீடியோவையும் பார்ப்பதற்கு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பொதுவாக, பிரபலங்கள் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். சச்சின் பகிர்ந்த இந்த வீடியோவும் விதிவிலக்கல்ல. சிறுவனின் கிரிக்கெட் வீடியோவிற்கு சச்சினின் ஃபாலோயர்கள் ரியாக்ட் செய்து, கமெண்ட்டுகள் செய்து தங்கள் ஆரவாரத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ ஒரு பிரபலத்தையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also read... விமானத்தை இயக்கிய பார்கின்சன் நோய் பாதித்த மூதாட்டி - தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய மகன்!
கிரிக்கெட் வீடியோவைப் பார்த்து உற்சாகமான அந்த பிரபல நடிகர், தன்னுடைய பிரமிப்பை, சச்சின் பகிர்ந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் தெரிவித்திருந்தார். அந்த பாலிவுட் பிரபலம், நடிகர் ரன்வீர் சிங். வீடியோவிற்கு ரியாக்ட் செய்து, “Bamboozled,” என்று கமென்ட் செய்திருந்தார். அதாவது, 'நம்பவே முடியவில்லை' என்று தன்னுடைய ஆச்சரியத்தைத் தெரிவித்திருந்தார்.
View this post on Instagram
அந்த வீடியோவில் ஒரு ஏழு அல்லது எட்டு வயதே உள்ள சிறுவன், பவுலிங் போடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அற்புதமான பந்து வீசும் அந்த சிறுவனின் பந்தை யாருமே எதிர்கொள்ள முடியவில்லை. ஒருவர் கூட ரன்கள் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, பலரின் விக்கெட்டுகளை சுலபமாக வீழ்த்தியும் இருக்கிறான்.
நீங்களும் அந்த வீடியோவைப் பார்த்து ரசிக்க வேண்டாமா? சச்சின் பகிர்ந்த அந்த சிறுவன் பவுலிங் போடும் வீடியோவின் தொகுப்பு இங்கே:
ரன்வீர் சிங் மட்டுமின்றி, உலகப்புகழ் பெற்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சாளரான பிரட் லீயும், இந்த சிறுவனுக்கு உலக அளவில் கிரிக்கெட் விளையாட திறன் உள்ளது என்று கமெண்ட்டில் “The kid can play” கூறிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.