ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கோவா கடற்கரையில் மகனுடன் பொழுதை கழிக்கும் சச்சின்.. மீன் பிடிப்பதில் ஆர்வம்!

கோவா கடற்கரையில் மகனுடன் பொழுதை கழிக்கும் சச்சின்.. மீன் பிடிப்பதில் ஆர்வம்!

டிரெண்டிங் வீடியோ

டிரெண்டிங் வீடியோ

Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கர் உடன் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கோவா கடற்கரையில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கோவாவில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள உள்ளூர் மீனவர்கள் மீன்பிடித்து வருவதை ஆர்வமுடன் ரசிக்கும் சச்சின், அவர்கள் மீன்பிடிப்பதை பற்றியும் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்க மீன்வலைகளை பற்றியும் ஆர்வமுடன் கேட்டு அறிந்துள்ளார்.

  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகளாகியும் இன்றும் கூட சச்சின் டெண்டுல்கருக்கு உள்ள மவுசு குறைய வில்லை. கிரிக்கெட் விளையாடும் போது எந்த அளவு ரசிகர் பட்டாளம் அவருக்கு இருந்ததோ, அதைவிட அதிகமாக தற்போது ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். தன்னுடைய ஓய்வு காலத்தை சந்தோஷமாக கழித்து வரும் சச்சின் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களையும் வீடியோவையும் தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

  தற்போது கோவா சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் வீடியோ ஒன்றினை ஷேர் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோவில் “இன்ட்ரஸ்டிங் மார்னிங்” வாசகங்கள் சேர்க்கப்பட்டு அங்குள்ள உள்ளூர் மீனவர்களிடம் சச்சின் உரையாடும் காட்சிகள் அடங்கியுள்ளது. சிவப்பு நிற டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு உள்ளூர் மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்று வருவதை பார்த்து இதை “நம்ப முடியவில்லை” என்று அவர் வர்ணித்துள்ளார்.

  ரூ.3.7 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு வெறும் 277 ரூபாய்க்கு வேணுமா? அசர வைத்த நபர்

  ராம்பான் எனப்படும் பாரம்பரிய மீன்பிடி கருவியை பயன்படுத்தி உள்ளூர் மீனவர்கள் எப்படி மீன் பிடிக்கிறார் பற்றியும் ஆர்வமுடன் கேட்டறிந்துள்ளார். அங்குள்ள மீன்பிடி படகின் அருகே மீனவரும், சச்சின் டெண்டுல்கரும் அருகருகே நின்று கொண்டு இந்த விவரங்களை பற்றி ஒருவருடன் கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)  சச்சின் டெண்டுல்கர் உடன் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கோவா கடற்கரையின் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதன் பின் அந்த மீனவருடன் அங்குள்ள கடற்கரை உணவகத்தில் சச்சின் தனது மகனுடன் பலவிதமான மீன் வகைகளை சுவைத்து மகிழ்கிறார்.சச்சின் வெளியிட்ட அந்த வீடியோவில் “கோவா மீனவருடன் சுவாரஸ்யமான ஒரு காலை” என்று வாசகங்களை சச்சின் இணைத்துள்ளார்.

  சச்சின் இந்த வீடியோவை ஷேர் செய்து சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்தனர். சச்சினின் பணிவான குணத்தையும், அனைவரும் நட்புடன் பழகுவதையும் பலர் பாராட்டி வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுள் என்று ஒரு நெட்டிசனும், சச்சினை சரியாக கவனிக்கவில்லை எனில் வெகு சீக்கிரத்திலேயே அந்த உணவகத்திற்கு பல மக்கள் படையெடுப்பார்கள் என்று மற்றொரு இணையவாசியும் மிரட்டும் விதத்தில் நகைச்சுவையாக தங்கள் கருத்தை பகிர்ந்துள்ளனர். ஷேர் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை மூன்று மில்லியனக்கும் அதிகமான பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Sachin tendulkar, Trending News, Viral