சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சச்சின் டெண்டுல்கரின் பாராசைலிங் வீடியோ!
சச்சின் டெண்டுல்கரின் பாராசைலிங் வீடியோ இணையதளத்தை கலக்கி வருகிறது.

சச்சின் டெண்டுல்கரின் பாராசைலிங் வீடியோ
- News18 Tamil
- Last Updated: December 11, 2020, 5:00 PM IST
கொரோனா வைரஸின் கடுமையான தாக்கம் நாடு முழுவதும் மெல்ல மெல்ல குறைந்து வருவதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக, கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பிரபலங்கள் தற்போது தங்களுக்கு பிடித்த சுற்றுலாத் தலங்களில் முகாமிட்டுள்ளனர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், அண்மையில் தனது குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுத்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில், கடலின் நடுவே சச்சின் பாராசைலிங் ( Parasailing) செய்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், இந்தியில் புகழ்பெற்ற பாடகரான ரிட்விட்ஸ் (Ritvitz) பாடிய Hum toh Udd Gaye’பாடலின் வரிகளை அந்த வீடியோவில் கேப்ஷன் (Caption) ஆக பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் Vacation Vibes என கேப்ஷன் செய்து தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சச்சின் பகிர்ந்துள்ளார். வண்டி ஒன்றின் மீது அமர்ந்தவாறு இருவரும் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தில் இருவரும் அருமையாக காட்சியளிக்கின்றனர்.
மற்றொரு வீடியோவில் சச்சின் மகிழ்ச்சியாக சைக்கிளிங் செய்கிறார். பசுமைபோர்த்திய அந்த இடத்தில் தனக்கே இயல்பான கொண்டாட்டத்துடன் சுற்றுலாவை கொண்டாடி மகிழ்கிறார். நீச்சல் குளத்தில் இருக்கும் மற்றொரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.
சச்சினின் வீடியோவுக்கும், புகைப்படத்துக்கும் லட்சக்கணக்கான லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் இணையத்தில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். பெரும்பாலான ரசிகர்கள், 'God of Cricket we love you, we miss you' என தங்களின் கருத்துகள் மூலம் சச்சின் மீது அன்பை பொழிந்து வருகின்றனர். இதனால், சமூகவலைதளங்களில் சச்சினின் புகைப்படமும், வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.
1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை சச்சின் தெண்டுல்கர் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 16. இதனையடுத்து டிசம்பர் 18, 1989ம் ஆண்டு முதன்முதலாக ஒருநாள் போட்டியில் அடியெடுத்து வைத்த அவர், 25 ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தார். அவரின் நீண்டநாள் கனவான உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு, 2011ம் ஆண்டு கேப்டன் மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடியபோது நனவானது.
அந்த தொடர் முழுவதும் சச்சின் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் செய்த பெரும்பாலான சாதனைகள் இன்றளவும் யாராலும் முறியடிக்கப்படவில்லை. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் தற்போதும் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.
2012ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், 2013ம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது, சச்சின் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். குறிப்பாக கொரோனா தொடர்பாக ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும், கிரிக்கெட் தொடர்பான தனது கருத்துக்கள், தனக்கு விருப்பமான உணவுகளின் பட்டியல் மற்றும் செய்முறைகளையும் சமூகவலைதளங்களில் மாஸ்டர் பிளாஸ்டர் பதிவிட்டு வருகிறார்.

View this post on Instagram