Home /News /trend /

இரு கைகளையும் பயன்படுத்தும் திறன் இருந்தால் என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் சச்சின்!

இரு கைகளையும் பயன்படுத்தும் திறன் இருந்தால் என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் சச்சின்!

சச்சின்

சச்சின்

வேலைகளை இரு கைகளும் சமமாக பிரித்து செய்யும். ஆகவே, நம் கைகளுக்கு கூடுதல் ஸ்ட்ரெஸ் ஏற்படாது. அப்படியொரு பலனை தான் சச்சினும் அனுபவித்து வருகிறார்.

பொதுவாக 100 மக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், அதில் ஏறக்குறைய 80 பேர் வலது கை பழக்கம் உடையவராக இருப்பார்கள். ஒருசிலர் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். ஒன்றிரண்டு பேர் மட்டுமே இரண்டு கை பழக்கம் உடையவராக இருக்கக் கூடும். கிரிக்கெட் உலகின் காட் ஃபாதராக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரும் இரு கை பழக்கம் உடையவர் தான்.

ஒரே கையில் எழுதுவது, சாப்பிடுவது, வலுவான வேலைகளை செய்வது என அதிக வேலை கொடுப்பதால், அந்த கையில் எப்போதுமே நமக்கு வலி ஏற்படக் கூடும். இரு கை பழக்கம் இருந்தால், வேலைகளை இரு கைகளும் சமமாக பிரித்து செய்யும். ஆகவே, நம் கைகளுக்கு கூடுதல் ஸ்ட்ரெஸ் ஏற்படாது. அப்படியொரு பலனை தான் சச்சினும் அனுபவித்து வருகிறார்.

கிரிக்கெடில் அவர் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் என்பது உலகறிந்த செய்தி. அதே சமயம், அவர் இடது கையும் பயன்படுத்தும் திறன்  உடையவர் என்பது பரவலாக அறியப்படாத தகவல். இருப்பினும், அதுகுறித்து அவரே விளக்கம் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

also read |  Shane Warne: ஷேன் வார்னுடன் 3 நண்பர்கள் தங்கியிருந்ததாக தகவல்
அந்த வீடியோவில் சச்சின் பேசுகையில், “ இரு கை பழக்கம் உடையவர் என்றால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நானும் கூட, ஃபோர்க் மற்றும் கத்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தி சாப்பிட வேண்டும் என்ற சூழல் வந்துவிட்டால், நான் இயல்பாக இடது கையைத்தான் சாப்பிட பயன்படுத்துகிறேன். ஆனால், சாப்ஸ் ஸ்டிக் பயன்படுத்தும்போது மூளை தானாகவே வேலை செய்ய மறுக்கிறது. இதனால், இடது கையை பயன்படுத்த இயலவில்லை. சாப்ஸ் ஸ்டிக் மூலமாக சாப்பிடுவதற்கு வலது கையை பயன்படுத்துகிறேன். நான் ஒரு சிக்கலான மனிதர்’’ என்று கூறியுள்ளார். வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)






 

இன்ஸ்டாகிராமில் வெளியாக 2 நாட்கள் ஆகியுள்ள இந்த வீடியோவை சுமார் 3.39 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். வீடியோவின் தலைப்பில், எழுதுவது, படிப்பது போன்ற அனைத்தையும் இடது கை பார்த்துக் கொள்கிறது. ஆனால், சாப் ஸ்டிக்ஸ் பயன்படுத்த வலது கையே உதவுகிறது’’ என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

also read |  Shane Warne: கண்ணீர் விடும் ஷேன் வார்னின் முதல் கேப்டன்
 

உணவு குறித்த விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் சச்சின். இதற்கு முன்பு ஒருமுறை, சமையலறையில் அவரே கைப்பட சமைத்து, அவரது அம்மாவுக்கு பரிமாறும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதை தற்போது நினைவூட்டியுள்ள இன்ஸ்டாகிராம் பதிவாளர் ஒருவர், “சச்சினுக்கு எப்போதுமே சாப்பாடு நினைப்புதான்’’ என்று கமெண்ட் அடித்துள்ளார். வேறுபலர் எப்போதும் போல சச்சினை பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர். அவரைப் போலவே தனக்கும் ரைட் ஹேண்ட் பேட்டிங் மற்றும் பவுலிங் வரும் என்றும், இடது கையில் எழுதுவேன் என்றும் மற்றொரு யூசர் கூறியுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sachin tendulkar

அடுத்த செய்தி