கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சோஷியல் மீடியாக்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். மேலும் சச்சினுக்கு ட்விட்டரில் சுமார் 37 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சச்சினுக்கு அதில் சுமார் 33 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
சச்சின் தனது ஓய்வு நேரத்தில் சமையல் செய்வது முதல் பாராசைலிங் சாகசத்தில் ஈடுபட முயற்சி செய்வது வரை தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல போஸ்ட்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து ஃபாலோயர்ஸை உற்சாகப்படுத்துகிறார். இது தவிர சில நேரங்களில் பல பொது பிரச்சனைகளைப் பற்றியும் சச்சின் பேச தவறுவது இல்லை. மக்களிடையே தண்ணீரை சேமிக்கும் பழக்கம் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
பெரும்பாலான மக்கள் தண்ணீரின் அருமை தெரியாமல் அதை அதிகம் வீணாக்கி வருகின்றனர். தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், உலகில் நிலவும் தண்ணீர் நெருக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம்அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து தண்ணீர் சேமிப்பை மக்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக சிறிய வீடியோ ஒன்றை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து இருக்கிறார் சச்சின்.
Also Read : தெருவோரத்தில் வசித்த நபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்.!
ஒவ்வொரு துளியும் முக்கியமானது, எனவே தேவையான அளவு மட்டுமே தண்ணீர் பைப்பை திறந்து பயன்படுத்தி விட்டு, பின்னர் டைட்டாக மூடவும் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். இந்த வீடியோவில் சச்சின் சுவாரசியமான சைகை ஒன்றை பயன்படுத்தி இருக்கிறார். சரியாக மூடப்படாத குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவதை காட்டுவதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது. வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் குழாயை மூடுவதையும், அதை செய்ய சோஷியல் மீடியா பிரபலம் Khaby Lame என்பவரின் சைகை பாணியை சச்சின் பயன்படுத்துவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.
தனது வீடியோக்களில், குறிப்பாக டிக்டாக்கில், பயனற்ற லைஃப் ஹேக்ஸ்களை தனது வித்தியாசமான சைகை மூலம் கிண்டலடிப்பதில் பிரபலமானவர் இந்த Khaby Lame. ஒவ்வொரு வீடியோவின் முடிவிலும் அவர் தனது இரு கைகளையும் பயன்படுத்தி "இவ்வளவு தான் விஷயம்.. இதுக்கு போய்.." என்கிற ரீதியில் சைகை செய்வார். எனவே Khaby Lame-ன் வீடியோக்கள் நெட்டிசன்களிடையே மிகவும் பிரபலம். இவரது ஸ்டைலை பயன்படுத்தி தண்ணீரின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்க முயற்சித்துள்ளார் சச்சின். இந்த கிளிப் ஷேர் செய்யப்பட்டதில் இருந்து சுமார் 10 மில்லியன் வியூஸ் மற்றும் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது. கிரிக்கெட்டின் கடவுளான சச்சினின் இந்த வீடியோவை பார்த்த பலர் வேடிக்கையாக அதே சமயம் பயனுள்ள செய்தியை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளதற்காக பாராட்டி உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.