ரஷ்யாவின் ஒரே பெண் விண்வெளி வீரரை கவுரவிக்க பார்பி பொம்மைகளை வெளியிட்ட டாய் நிறுவனம்!

அன்னா கிகினா

36 வயதான அன்னா கிகினா தற்போது 2022ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட விண்வெளி சுற்றுப்பாதை பயணத்தில் பங்கேற்கும் ஒரே ரஷ்ய பெண்மணி ஆவார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ரஷ்யாவின் ஒரே பெண் விண்வெளி வீரரை கவுரவிக்கும் வகையில் மேட்டல் டாய் நிறுவனம் அவரை போலவே ஒரு பார்பி டாலை வெளியிட்டுள்ளது. இதனை பெண்களை ஊக்குவிக்கும் ஒரு பிரச்சாரமாக செயல்படுத்தியுள்ளது.

  36 வயதான அன்னா கிகினா தற்போது 2022ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட விண்வெளி சுற்றுப்பாதை பயணத்தில் பங்கேற்கும் ஒரே ரஷ்ய பெண்மணி ஆவார். அவர் விண்வெளியில் பயணிக்கும் நான்காவது பெண்மணியாகவும், விண்வெளி வீரர் வாலண்டினா தெரெஷ்கோவாவை தொடர்ந்து 58 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளியில் பயணிக்கும் முதல் ரஷ்ய பெண்மணியாக இவர் திகழ்கிறார்.

  இது தொடர்பாக ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "கிகினாவின் திறமைகள், வெற்றிகள் மற்றும் தனிப்பட்ட குணங்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட மேட்டல் நிறுவனம் விண்வெளி வீரர் போன்ற பார்பி டாலை வெளியிட்டது. "எந்த கனவும் நனவாகும் - நீங்கள் உங்களை நம்பி முன்னேற வேண்டும்" என்பதைக் காட்டிவதில் பார்பி ஒரு குறியீடாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேட்டல் நிறுவனத்தின் “யூ கேன் பி எனிதிங்” ரோல் மாடல்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக விண்வெளி வீராங்கனை போல தோற்றமளிக்கும் பார்பியுடன் கிகினா ஒரு போஸ் கொடுத்துள்ளார். அந்த பார்பி டால் கிகினாவின் பெயர் குறிச்சொல்லுடன் ஜெட் ப்ளூ ஜம்ப்சூட் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனத்தின் லோகோ கொண்ட வைட் ஆர்லன் ஸ்பேஸ் சூட் ஆகியவற்றை அணிந்திருப்பதைக் காணலாம்.

  இது குறித்து ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்தாவது, "அன்னா கிகினா வாழ்க்கையை சித்தரிக்க இது ஒரு சிறந்த உதாரணம். இது ஒரு பொறியியலாளர் சிறுமியின் கதை, ஒரு முறை தைரியமான நடவடிக்கை எடுத்து, விண்வெளி ஆராய்ச்சியில் தனது திறமையை காட்ட துணிந்த வீரர் இவர்" என புகழாரம் சூட்டியது. "பிரபஞ்சத்தின் பரந்த தன்மையை வெல்வது ஒரு பெண்ணின் வணிகம் அல்ல என்று யார் சொன்னார்கள்?" என்ற கேள்வியையும் விண்வெளி நிறுவனம் எழுப்பியது.

  Also read... தனக்கு சிகிச்சையளித்த மருத்துவரை நினைவுக்கூர்ந்த காட்டுயானை - தாய்லாந்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

  124 ரஷ்ய அல்லது சோவியத் விண்வெளி வீரர்களில், 4 பேர் மட்டுமே பெண்கள். முன்னதாக, அன்னா கிகினா ரேடியோ சைபீரியாவில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் ஒரு பொறியாளராக அவசரகால சூழ்நிலைகளில் பயிற்சி பெற்றார். இது குறித்து பேசிய கிகினா, படிப்படியாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிறுமிகளின் கனவுகளை நனவாக்குவதில் எனது கதை உதாரணமாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். தான் ஒரு குழந்தையாக இருக்கும்போது விண்வெளி வீரராக இருக்க வேண்டும் என்று கனவு காணவில்லை.

  ஆனால் அப்போது என்னிடம் ஒரு பார்பி விண்வெளி பொம்மை இருந்திருந்தால், அந்த எண்ணம் எனக்கு சிறு வயதிலேயே வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பெண்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு தொழிலையும் தேர்வு செய்வதற்கான உரிமையை பெறுவது மிக முக்கியமான விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மாஸ்கோ டைம்ஸ் கருத்துப்படி, சோவியத் ஏவிய முதல் விண்வெளி விமானத்தின் 60வது ஆண்டு விழாவில் நடைபெறும் போட்டியில் இந்த பொம்மை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: