Home /News /trend /

கரடியுடன் இளம்பெண் பிரன்ஷிப்... வைரலாகும் புகைப்படங்கள்!

கரடியுடன் இளம்பெண் பிரன்ஷிப்... வைரலாகும் புகைப்படங்கள்!

கரடியுடன் பிரன்ஷிப்

கரடியுடன் பிரன்ஷிப்

ரஷ்யாவைச் சேர்ந்த வெரோனிகா டிச்ச்கா என்பவர் வழக்கத்திற்கு மாறாக, ஒரு காட்டு கரடியுடன் பிரன்ஷிப் வைத்துள்ளார்.

சிலருக்கு செல்லப்பிராணிகள் என்றாலே மிகவும் பிடிக்கும். விலங்குகள், பறவைகள் என பல்வேறு வகையான செல்லப்பிராணிகளை மக்கள் நேசிப்பதோடு அதனை வளர்க்கவும் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக பலர் நாய்களை வீட்டில் வளர்த்து வருகிறார்கள். சிலர் பூனைகளை வளர்த்து வருகிறார்கள். அவற்றை செல்லப்பிராணி என்று சொல்வதைவிட வீட்டில் இருக்கும் மற்றொரு குடும்ப உறுப்பினர் என்று சொல்வதையே அனைத்து உரிமையாளர்களும் விரும்புவார்கள்.

ஏனெனில், அவற்றோடு அந்த அளவுக்கு நட்புறவாடுவார்கள். அதே அளவு பாசத்தை செல்லப்பிராணிகளும் தங்களது உரிமையாளருக்கு கொடுக்கும். ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் நட்பு கொள்ளும் ஒரு செல்ல பிராணி யார் என்பது தெரிந்தால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். ரஷ்யாவைச் சேர்ந்த வெரோனிகா டிச்ச்கா என்பவர் வழக்கத்திற்கு மாறாக, ஒரு காட்டு கரடியுடன் பிரன்ஷிப் வைத்துள்ளார். ரஷ்ய பெண்ணின் அந்த மாபெரும் நண்பர் அனைவரின் இதயத்திலும் ஒருவித பய உணர்வையே ஏற்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் வெரோனிகா தனது நண்பனை மிகவும் நேசிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் என்ன செய்தாலும் சரி எங்கு சென்றாலும் சரி தந்து நண்பன் கரடியை ஒருபோதும் தனியாக விட்டு செல்லமாட்டாராம். இருவரும் ஒன்றாகவே சாப்பிடுவது, ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் ஏரியில் மீன்பிடிக்க படகில் செல்வது, அருகருகே தூங்குவது என தனது நண்பனை விட்டு வெரோனிகா ஒருபோதும் பிரிந்ததில்லை. இந்த ராட்சத பழுப்பு நிற கரடிக்கு ஆர்ச்சி என்றும் அவர் பெயர் வைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் ஒரு சஃபாரி பூங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது வெரோனிகா ஆர்ச்சியைச் சந்தித்தார். அந்த சமயத்தில் ஆபத்தில் இருந்த ஆர்ச்சியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். ராட்சத கரடியுடன் சிறிது நேரம் செலவிட்ட பிறகு, அவர்களுக்கு இடையே ஒரு நட்பு ஏற்பட்டது. பின்னர் வெரோனிகா ஆர்ச்சியை மீன்பிடிக்க ஏரிக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினார். படிப்படியாக, அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு அழகான நட்பு வளர்ந்தது.

இப்போது இந்த நண்பர்கள் இருவரும் நடைமுறையில் பிரிக்க முடியாத நட்பை பகிர்ந்து வருகின்றனர். வெரோனிகாவைப் பொறுத்தவரை, அவர் ஆர்ச்சியுடன் ஒரு நல்ல பிணைப்பை வளர்த்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதையே விரும்புகிறார்கள். சில கரடிகள் மாமிச உணவுகளை சாப்பிடும் என்ற கூற்றுக்கு ஏற்ப, கரடிகள் மனிதர்களைத் தாக்கும் பல நிகழ்வுகள் முன்னதாக நடந்துள்ளன. ஆனால் தங்களுக்குள் எந்தவித அசம்பாவிதங்களும் இதுவரை நடந்ததில்லை, இனியும் நடக்காது என வெரோனிகா உறுதியாக கூறினார்.

Also read... டாடா நிறுவனத்தை காப்பாற்றிய பெண்மணி!

ஆர்ச்சி மீதான தனது அன்பை வெளிப்படுத்த, வெரோனிகா ஏராளமான போட்டோஷூட்களைச் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர்கள் இருவரும் ஒரு மீன்பிடி படகில் ஒன்றாக சவாரி செய்வதைக் காணலாம். ஆர்ச்சி படகுகளில் சவாரி செய்வதை விரும்பும் என வெரோனிகா கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, கரடி என்னை ஒரு தாய் உருவமாகப் பார்க்கிறது. அது பயப்படும்போதெல்லாம் எனக்கு பின்னால் கூட சில சமயம் ஒளிந்து கொள்ளும்" என்று கூறினார்.

அவர்கள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெரோனிகா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பதிவுக்கு தன்னை பின்தொடர்பவர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். கரடிகள் பொதுவாக ஒரு கொடூரமான காட்டு விலங்காகக் கருதப்பட்டாலும் அதனுடன் நட்புறவு மேற்கொள்ளும் வெரோனிகாவின் தைரியத்தை கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Russia, Trending

அடுத்த செய்தி