Home /News /trend /

ஒரு பெண்ணை டேட் செய்கிறேன் , நான் ஒரு 'Gay' என வெளிப்படையாக அறிவித்த டென்னிஸ் வீராங்கனை

ஒரு பெண்ணை டேட் செய்கிறேன் , நான் ஒரு 'Gay' என வெளிப்படையாக அறிவித்த டென்னிஸ் வீராங்கனை

Image : (Instagram - Kasatkina)

Image : (Instagram - Kasatkina)

Daria Kasatkina | 25 வயதான டென்னிஸ் வீராங்கனை டரியா கசட்கினா பிரபலமான சாக்கர் விளையாட்டுப் போட்டியின் ஸ்ட்ரைக்கராக ஆடி வரும் நாட்யா கார்போவா என்ற வீராங்கனையை தான் டேட் செய்வதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பெண்கள் டென்னிஸ் வீராங்கனைகளில் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள டரியா கசட்கினா, தான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்வதாக வீடியோ பேட்டியில் கூறியுள்ளார். அதாவது, தான் ஒரு ஓரினச்சேர்கையாளர் என்பதை முன்னணி டென்னிஸ் வீராங்கனை அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது வரை LGBTQ உறவுகள் பற்றி வெவ்வேறு கருத்துகளும், எதிர்ப்புகளும் நிலவி வரும் நிலையில், புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனை தான் ஒரு ‘Gay’ என்றும் ஒரு பெண்ணை டேட்டிங் செய்து வருவதாகவும் ஒரு பேட்டியில் கூறியது உலகம் முழுவதிலும் வரவேற்பைப் பெற்றது.

25 வயதான டென்னிஸ் வீராங்கனை டரியா கசட்கினா, கடந்த மாதம் நடைபெற்ற ஃபிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டியின் போது, இது நாள் வரை மறைத்து வைத்திருந்த உண்மையை வெளியே கூற வேண்டும் என்று முடிவு செய்ததாகக் கூறி ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பிரபலமான சாக்கர் விளையாட்டுப் போட்டியின் ஸ்ட்ரைக்கராக ஆடி வரும் நாட்யா கார்போவா என்ற வீராங்கனையை தான் டேட் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதையும் குறிப்பிட்டார்.

கசட்கினா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நடாலியா ஜாபியாகோவைத் தழுவிய புகைப்படத்தை வெளியிட்டார்.



 




View this post on Instagram





 

A post shared by Daria Kasatkina🐬 (@kasatkina)






டரியா கசட்கினாவின் மிகவும் விருப்பமான டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். டென்னிஸ் வீராங்கனைகளில், அவர் பெட்ரா குவிடோவா மற்றும் மரியா ஷரபோவாவின் ரசிகை என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி, டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் தரவரிசையில் டரியா கசட்கினா முதல் 20 இடங்களுக்கு வந்துள்ளார். மேலும், 16 மே 2022 அன்று மீண்டும் நம்பர் 1 ரஷ்ய வீராங்கனை ஆனார். டரியா கசட்கினா கிரெம்ளின் கோப்பை மற்றும் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டிராஃபி ஆகிய மிகப்பெரிய பட்டங்களை வென்றுள்ளார்.

Also Read : கட்டிப்பிடி வைத்தியத்தில் ’கல்லா’ கட்டும் இளைஞர்.. ஒரு மணி நேரத்தில் ரூ.7000 சம்பாதிக்கிறார்

“மன நிம்மதியுடன் வாழ்வது தான் மிகவும் முக்கியம். மற்றதெல்லாம் .....” என்று ரஷ்யாவில் அவரை பேட்டியெடுத்த நபரிடம் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், விளையாட்டுத்துறையில் உள்ள பிரபலங்கள் மட்டுமல்லாமல், வேறு எந்த துறையில் இருந்தாலும், இதைப் பற்றி பேசுவது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



ரஷ்ய ஆட்சியாளர்கள், ஆண்-பெண் என்ற பாரம்பரியமான உறவைத் தாண்டி, LGBTQ என்ற உறவுமுறையை மைனர்கள் உட்பட பலருக்கும் எடுத்துரைப்பதை தடுக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான சட்டம் ஏற்கனவே ரஷ்ய நாட்டில் 2013 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி, ஓரினச்சேர்க்கையாளர்கள் மாநாடு, கூட்டம் உட்பட, அவர்களுக்கான ஆக்டிவிஸ்ட் உரிமைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
Published by:Selvi M
First published:

Tags: LGBT, Trending

அடுத்த செய்தி