நடுக்கடலில் மீனவர் வலையில் சிக்கிய ஏலியன் மீன் - உறைந்து போன மீனவர்

நடுக்கடலில் மீனவர் வலையில் சிக்கிய ஏலியன் மீன்

39 வயதான ரோமன் ஃபொரட்சோவ் நீண்ட காலமாக கடலின் ஆழ்பகுதிகளுக்கு சென்று மீன்களை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

 • Share this:
  கடலுக்கு அடியில் ஏராளமான மர்மங்கள் பல புதைத்து கிடக்கிறது. சூழ்நிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரிடரின் போது இதுப்போன்ற மர்மங்கள் வெளிச்சத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது. இவற்றில் பல நமக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும். சமீபத்தில் மீனவர் ஒருவர் ரஷ்யாவின் நோர்வே மற்றும் பேரண்ட்ஸ் கடலில் இருந்து மிகவும் விசித்திரமான மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மீனவர் தன் வலையில் சிக்கிய விசித்திர மீனின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த விசித்திர மீன் தான் பேச்சு பொருளாக உள்ளது.

  39 வயதான ரோமன் ஃபொரட்சோவ் நீண்ட காலமாக கடலின் ஆழ்பகுதிகளுக்கு சென்று மீன்களை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் ரோமன் ஆழ்கடலில் வலையை வீசி உள்ளார். வழக்கம் போல் வலையை இழுத்து மீன்களை எடுத்துள்ளார். அப்போது அவர் வலையில் மிகவும் விசித்திரமான மீன் ஒன்றை கவனித்துள்ளார்.  தன் வலையில் சிக்கிய விசித்திர மீனின் புகைப்படங்களை ரோமன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ரோமன் பிடித்த மீன்களின் கண்கள் பொத்தான்களை போல் இருந்து உள்ளது. அதன் உடல் வெள்ளி மற்றும் கருப்பு நிறத்தில் இருந்துள்ளது.  மேலும் அதன் வாய் பகுதி விசித்திரமானதாகவும் இருந்துள்ளது. அந்த மீனின் பற்கள் அரக்கர்களுக்கு இருப்பது போல் கூர்மையாக இருந்துள்ளது. விசித்திர மீனை பார்த்த உடன் அதிர்ச்சியில் உறைந்து போன ரோமன் அதன் வயிற்று பகுதியில் குறியீடு ஒன்று இருப்பதையும் பார்த்தார். இதனால் இந்த மீனை ஏலியன் மீன் என்று ரோமன் பெயரிட்டுள்ளார். ரோமன் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு ஏராளமானோர் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

  Also Read : உடலுறவில் ஈடுபட்டபோது ஆணுறுப்பு உடைந்த கொடுமை : செங்குத்தாக உடைந்ததால் மருத்துவர்கள் ஷாக்

  ரோமன் தன் வலையில் சிக்கும் விசித்திரமான மீன்களின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஆழமான கடலில் எந்த பகுதியில் வலை விரித்தால் இதுப்போன்ற மீன்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிந்து வைத்துள்ளார். ரோமனின் இன்ஸ்டாகிராம் பதிவை பலர் லைக் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: