ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

''நான் ஒரு ஏலியன்.. செவ்வாய் கிரகத்துல இருந்து வந்தேன்'' - பகீர் தகவலைச் சொன்ன சிறுவன்.!

''நான் ஒரு ஏலியன்.. செவ்வாய் கிரகத்துல இருந்து வந்தேன்'' - பகீர் தகவலைச் சொன்ன சிறுவன்.!

வேற்றுக்கிரவாசி என்று சொல்லிக்கொள்ளும் ரஷிய சிறுவன்

வேற்றுக்கிரவாசி என்று சொல்லிக்கொள்ளும் ரஷிய சிறுவன்

குறிப்பாக மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலின் கீழ் இருந்ததாக நம்பப்படும் லெமூரியன் காலத்திய ஒரு கண்டத்திற்கு வந்து சென்றதாகவும் கூறியுள்ளான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

விஞ்ஞானம் வளர வளர பூமி, மனிதன் வாழும் இடம் என்ற தரத்தை இழந்து வருகிறது. அதனால் மனிதர்கள் குடியேற வேறு கிரகங்கள் உள்ளதா என்று ஆராய்ந்து வருகின்றனர். வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனரா என்று அவர்களை தொடர்பு கொள்ளவும் ஏதேதோ சாகசங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிறுவன் தான் ஒரு செவ்வாய் கிரகவாசி என்று கூறி வருகிறான்.

டெய்லி ஸ்டாரின் அறிக்கையின்படி, வோல்கோகிராட்டைச் சேர்ந்த போரிஸ் கிப்ரியானோவிச் என்ற ரஷ்ய சிறுவன், தான் ஒரு மனிதன் அல்ல, வேற்று கிரக உயிரினம் என்று கூறுகிறான். அணுஆயுத அழிவிலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்திருப்பதாகவும்  சொல்லிக்கொள்கிறான்.

விண்மீன்களுக்கு இடையேயான பயணங்களை மேற்கொள்ளக்கூடியவர்களுடன் முந்தைய வாழ்க்கையை மேற்கொண்டதாக போரிஸ் கூறுகிறான். மனித இனத்தை அழியாமல் பாதுகாக்க பூமிக்கு அனுப்பப்பட்ட இண்டிகோ குழந்தைகளில் நானும் ஒருவன். பல ஆண்டுகளாக பூமிக்கு பல முறை விஜயம் வந்து போவதாகவும் அச்சிறுவன் கூறியுள்ளான்.

இதையும் படிங்க: தென்னிந்தியாவின் சிரபுஞ்சி அகும்பே பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? டிரீப் செல்ல சரியான நேரம் இதுதான்...!

குறிப்பாக மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலின் கீழ் இருந்ததாக நம்பப்படும் லெமூரியன் காலத்திய ஒரு கண்டத்திற்கு வந்து சென்றதாகவும் கூறியுள்ளான்.

தான் ஒரு விண்கலத்தையும் உருவாக்கியதாக கூறும் போரிஸ், அது 25% திட உலோகத்தால் செய்யப்பட்ட வெளிப்புற அடுக்குடன் ஆறு அடுக்குகளைக் கொண்டது. இரண்டாவது அடுக்கு 30% ரப்பர் போன்றது. மூன்றாவது அடுக்கு 30% உலோகம். கடைசி 4% ஒரு சிறப்பு காந்த அடுக்கைக் கொண்டது. இந்த காந்த அடுக்கை நாம் ஆற்றல் படுத்தினால், இந்த இயந்திரங்கள் பிரபஞ்சத்தில் எங்கும் பறக்க முடியும் என்கிறான்.

போரிஸ் மட்டுமல்ல, அவரது தாயும் கூட தனது மகனின் தனித்தன்மைகளை குறிப்பிடும்போது. போரிஸின் பிறக்கும் போது தனக்கு வலி கூட ஏற்படவில்லை. குழந்தையை என்னிடம் காட்டியபோது, ​​என் சிறிய குழந்தை தனது பெரிய பழுப்பு நிற கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய கண் கொஞ்சம் அசாதாரணமானது தான் என்றார்.

இதையும் படிங்க : ஒளிமாசு இல்லாத டார்க் ஸ்கை தேசமாகும் நியூசிலாந்து.... அப்படியென்றால் என்ன?

போரிஸின் அறிவாற்றல் திறன்கள் அவரது வயதை விட அதிகமாக இருந்துள்ளது. அவர் 1 வயதாக இருந்தபோது செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளை அவர் எளிதாகப் படிக்க முடிந்தது. இது அவர் மற்ற குழந்தைகளைப் போல் அல்லாத ஒரு அசாதாரண குழந்தை என்றே நம்பவைக்கிறது.

அயனோஸ்பியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெரஸ்ட்ரியல் மேக்னடிசம் மற்றும் ரஷ்ய அறிவியல் அகாடமியில் உள்ள ரேடியோ வேவ்ஸ் ஆகியவற்றின் சில நிபுணர்கள் சிறுவனது உடம்பில் வலுவான அதிர்வலைகளை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவர் வேற்றுகிரகவாசி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

சமூகத்தை விட்டு காணாமல் போன தாய்-மகன் இருவரும் அறியப்படாத மற்றும் ஒதுங்கிய கிராமத்தில் ரஷ்ய பாதுகாப்பின் கீழ் வசிப்பதாக ஒரு ஊடகவியலாளர் அறிவித்துள்ளார். ஆனால் அந்த சிறுவன் வேற்றுகிரக வாசியாக இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் சரியாக இல்லை.

Published by:Ilakkiya GP
First published:

Tags: MARS, Russia