ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உயிரோடு கல்லறைக்குள் போக ரூ.47 லட்சம்.. இப்படியும் ஒரு தெரபி!

உயிரோடு கல்லறைக்குள் போக ரூ.47 லட்சம்.. இப்படியும் ஒரு தெரபி!

காட்சிப்படம்

காட்சிப்படம்

ரஷ்யாவில் ஒரு நிறுவனம் ஆன்சைடியை எதிர்கொள்வதற்காக வினோதமாக உயிருடன் புதைக்கும் சிகிச்சையைக் கொண்டுவந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • intern, IndiaRussiaRussiaRussia

  ரஷ்யாவில் உள்ள பிரகெடட் அகாடமி என்ற நிறுவனம் ஆன்சைடி என்று அழைக்கப்படும் கவலை, பயம், பதற்றம் போன்றவற்றுக்கு போக்குவதற்கு வினோதமாக உயிருடன் குழியில் புதைக்கும் தெரபியை அறிமுகம் செய்துள்ளனர்.

  சைகிக் தெரபி என்று அழைக்கப்படும் இதன் மூலம் ஆன்சைடியால் பாதிக்கப்பட்ட நோயாளியை உயிருடன் குழியில் புகைக்கின்றனர். அப்படிப் புதைப்பதன் மூலம் அவர் அதனை எதிர்த்துப் போராடக் கூடிய திறன் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

  இதற்கு ஒரு பெரிய தொகையையும் அவர்கள் வசூலிக்கின்றனர். இந்திய மதிப்பு படி ரூ.42 லட்சத்தைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படி நீங்கள் முழு தொகையைச் செலுத்தத் தாயார் என்றால் உங்களைச் சவப்பெட்டியில் போட்டு குழிக்குள் இறக்கி விடுவர்.

  மேலும் இதில் விலை குறைவான ஆஃபரும் உண்டு, அது சிறிது எளிமையானது. அதற்கு இந்திய மதிப்பு படி ரூ.12 லட்சம் வசூலிக்கப்படுகிறது. அது ஆன்லைனில் கிடைக்கிறது. 42 லட்சம் கொடுத்து ஒருவர் சவப்பெட்டியுடன் குழியில் இறங்குவதை நீங்கள் வீட்டில் இருந்த படியே பார்க்கலாம். இதும் ஒரு தெரபி தான் என்று நிறுவனம் கூறுகிறது. வீடியோவில் அவர்கள் உயிருடன் புதைப்பதைப் பார்க்கும் போது காண்டில் விளக்கு, இறுதி அஞ்சலி பாடல்கள் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

  பிரகெடட் அகாடமி நிறுவனர் இது குறித்துக் கூறுகையில், மனிதனை உயிருடன் புதைப்பது முழுமையாகப் பாதுகாப்பானது என்றும் இதன் மூலம் அவர்கள் இறப்பின் அனுபவத்தைப் பெற்று மீண்டும் வாழும் எண்ணம் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

  Also Read : சாக்லேட்டில் மாட்டிறைச்சி கலப்பு? - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ’காட்பரி’ டைரி மில்க்!

  இப்படி வினோதமாகச் செய்வதன் மூலம் அவர்களின் உள்ள கவலை, பயம், பதற்றம் போன்ற நோய்கள் குணமடைய வாய்ப்பளிக்கிறது. இறந்த பின் புதைக்கும் தருணத்தை உயிருடன் உள்ள போதே அவர்கள் மேற்கொள்ளுகின்றனர். மேலும் இதன் மூலம் மனநோயாளிகளையும் குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர்.

  ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கல்லறையில் இந்த நிறுவனம் உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கும் தெரபியைச் செயல்படுத்தி வருகின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Funeral, Russia