Home /News /trend /

ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்... மணப்பெண்ணை மகிழ்வித்த மணமகன் - வைரலாகும் வீடியோ

ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்... மணப்பெண்ணை மகிழ்வித்த மணமகன் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

மனதின் மகிழ்ச்சி மற்றும் பறவைகளின் ஒற்றுமை குறித்த வீடியோ ஒன்றை இந்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா (Rupin Sharma IPS ) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பலரின் கவனம் பெற்றுள்ளது.

    மகிழ்ச்சி என்பது நமது மனநிலையில் உள்ளது என இந்திய ஐ.பி.எஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா (Rupin Sharma IPS ) தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் சைக்கிளில் பயணிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட சைக்கிளில் மணப்பெண் சைக்கிளின் முன் உள்ள கம்பியின் பிடியில் அமர்ந்து கொண்டு மணமகன் பின்னர் அமர்ந்து கொண்டும் சைக்கிளில் பயணிக்க முற்படுகின்றனர்.

    இதனை மனம்மக்களுடன் உடன் வந்தவர்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாக எடுக்கின்றனர். இந்த வீடியோ பலரின் கவனம் பெற்று வைரலாகி உள்ளது. இந்த வீடியோ ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா (Rupin Sharma IPS ) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து மகிழ்ச்சி என்பது நமது மனநிலையில் உள்ளது என தலைப்போடு பதிவிட்டுள்ளார்.



    இதே போன்று சமீபத்தில் அவர் வெளியிட்ட பறவைகளின் பாசப்போராட்ட வீடியோ பலரின் கவனம் பெற்றது. அதில் சேவல் ஒன்று தனது துணையை இளைஞர் ஒருவர் கூண்டில் அடைக்கும் போது அவரின் கால்களை கொத்தி அடைக்காதீர்கள் என கூறுவது போல் பாவனை செய்தது.

    எனினும் இளைஞர் எதையும் பொருட்படுத்தாது கூண்டில் அடைத்து விட்டுச் சென்ற போதும் சேவல் மீண்டும் வந்து கூண்டினை பார்த்து கூண்டினை திறந்து தன் சக இனத்தை விடுவித்தது. பறவைகளின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.



    சிறந்த துணை எனும் தலைப்பின் கீழ் இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா (Rupin Sharma IPS ) இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி