நாய்க்குட்டியை கடுப்பேற்றிய தம்பதி! என்ன நடந்தது தெரியுமா? வைரல் வீடியோ

நாய்க்குட்டியை கடுப்பேற்றிய தம்பதி!

உரிமையாளர்கள் நாய்க்குட்டிக்கு வைத்த அன்பு சோதனையில் கடுப்பான நாய்க்குட்டி தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு, நாள்தோறும் எதிர்மறையான செய்திகளை கேள்விப்பட்டு பயத்தில் உறைந்துபோயுள்ளனர். அவ்வப்போது இணையத்தில் வரும் சில வைரல் வீடியோக்கள் அவர்களின் மன அழுத்தத்துக்கு மருந்தாக இருக்கும். சோகத்தில் இருந்தால்கூட தங்களையும் மறந்து சிரிப்பார்கள். அப்படியான ஒரு வீடியோ ட்விட்டர் தளத்தில் வைரலாகியுள்ளது.

தாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டியை சாலைக்கு அழைத்து வரும் தம்பதி, யாரை அதிகம் விரும்புகிறது என்பதை பரிசோதிக்க முயற்சிக்கின்றனர். சாலையின் நடுவே இருவரும் நின்றுகொள்ளும்போது, அவர்களுக்கு இடையில் நாய்க்குட்டியும் நின்று கொள்கிறது.

அப்போது, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் தம்பதியினர், திடீரென எதிரெதிர் திசையில் வேகமாக ஓடிவிடுகின்றனர். இருவருமே பாசத்துக்குரியவர்கள் என்பதால் யார் சென்ற திசையில் ஓடுவது என்பதை புரியாமல் நாய்க்குட்டியானது சாலையின் நடுவே நின்று, அவர்கள் ஓடிய திசையை பார்க்கிறது.

ALSO READ | நாய் குட்டியை ஹைட்ரஜன் பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடியூபர் - விபரீத முயற்சியால் போலீசில் சிக்கினார்! வைரல் வீடியோ...

அதன்பிறகு அந்த நாய்க்குட்டி செய்த சுட்டித்தனம் தான், வீடியோவை டிரெண்டாக்கியுள்ளது. தம்பதிகள் ஓடும் திசையை நோக்கி பார்க்கும் நாய்க்குட்டிக்கு என்ன செய்வதென புரியவில்லை. பின்னர், தான் நின்றுகொண்டிருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு குறைக்கும் அந்த நாய்க்குட்டி, தன்னைத்தானே வட்டமாக சுற்றுகிறது. அதாவது, இருவரும் விட்டுவிட்டு ஓடியதால் கடுப்பான நாய்க்குட்டி கோபத்தில் அதே இடத்தில் வட்டமடித்தவாறு குறைக்கிறது. பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் நாய்க்குட்டியின் வீடியோ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகியுள்ளது.

 

  

 

ஒருவாரத்துக்கு முன்பு பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை தற்போது வரை 32 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது266.6 K லைக்குகளையும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீ டிவீட்டுகளையும் பெற்றுள்ளது. கமெண்ட் பகுதி நிரம்பி வழிகிறது. உரிமையாளர்கள் விட்டுச் சென்றதால் கடுப்பான நாய்க்குட்டி, அங்கேயே வட்டமடிக்கிறது எனவும், உரிமையாளர்களின் யாரை அதிகம் விரும்புகிறது என அவர்கள் பரிசோதனை நடத்தியிருக்கிறார்கள்.

ALSO READ | "அட இது என் நிழலா?" தன் நிழலை பார்த்து வியந்த ஒட்டக குட்டி - வைரலாகும் வீடியோ

அதில், இருவரையும் பிடிக்கும் என்பதை உணர்த்தும் விதமாக நாய்க்குட்டி, இருவரும் ஓடிய திசையில் ஓடாமல் அங்கேயே நின்றுகொண்டு வட்டமடிக்கிறது என நெட்டிசன்கள் கூறியுள்ளனர். கொரோனா கடுப்பேற்றிக்கொண்டிருக்கும் நிலையில், வீட்டில் சும்மா இருக்க முடியாமல் ஏன் நாயை கடுப்பேற்றிக்கொண்டிருக்கிறீர்கள்? எனவும் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வீட்டில் இருப்பதற்கு போர் அடிக்கிறது என்றால், செல்லப் பிராணிகளுடன் விளையாடினால் நேரம் செல்வது தெரியாது என கூறியுள்ள சில நெட்டிசன்கள், கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் வீட்டிலேயே விளையாடலாம், பொதுவெளிக்கு வந்து விளையாடாதீர்கள் என்று சிலரும் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

ALSO READ | 'வளர்த்த பெண்ணை கண்டதும் கத்தி பாசத்தை பொழிந்த கழுதை' கண்ணீருடன் கட்டி அனைத்த சிறுமி - வைரலாகும் வீடியோ

ஆனால், இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது எப்போது? என்ற விவரம் இல்லை. பழைய வீடியோவாக கூட இருக்கலாம், ரசிப்பதற்காக சிலர் மீண்டும் பகிர்ந்திருக்கலாம் என்றும் இணையவாசிகள் கமெண்ட் அடித்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: