கொரோனா வதந்திகளும், மூடநம்பிக்கைகளும் : எவற்றையெல்லாம் நம்பக்கூடாது?

கொரோனா வதந்திகளும், மூடநம்பிக்கைகளும் : எவற்றையெல்லாம் நம்பக்கூடாது?
கொரோனா (COVID 19)
  • Share this:
பொய்யான கொரோனா வதந்திகளையும், மூடநம்பிக்கைகளையும் சரிபார்க்காமல் பரப்புவதைத் தவிருங்கள். ஃபார்வார்டு செய்திகளாக வரும் கொரோனா தொடர்பான செய்திகளை சரிபார்க்காமல் நம்பாதீர்கள்.

வாட்சப் ஃபார்வார்டுகளில், பலரும் கற்பனைகளையும், கட்டுக்கதைகளும் பரப்புவதைக் கட்டுப்படுத்துவதற்காக, வாட்சப் நிறுவனம் என்னென்னவோ முயற்சிகளை மேற்கொள்கிறது. அன்லிமிடெட் ஃபார்வார்டு மெசேஜுகளின் வரம்பைக் குறைத்தாலும், பொய் செய்திகள் குறைந்தபாடில்லை. வதந்தியாளர்களும், பயத்தை ஏற்படுத்துபவர்களும், எதையும் பொருட்படுத்தாமல் வதந்திகளை பரப்புவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும், கொரோனோ வைரஸின் பிறப்பிடம் பற்றியும், இன்னும் பிற வதந்திகளும் வாட்சப் வழியாகப் பரவி வருகிறது.  • சில நாட்களுக்கு முன்னர், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த செய்தியில், கொரோனா வைரஸ் பாதிப்பை கஞ்சா செடியின் இலைகளால் சரிசெய்ய முடியும் என்பதை பகிர்ந்திருந்தார். அது செய்தியல்ல. கொரோனாவ கிண்டல் செய்து போடப்பட்ட மீம். மீம் செய்தியின் டெம்ப்ளேட்டில் இருந்ததால், அதை சரிபார்த்து உண்மைத்தன்மை அறியாமல் பகிர்ந்திருந்தார் விவேக் அக்னிஹோத்ரி.

  • அடுத்த வாட்சப் வதந்தி பூண்டு வைத்தியத்தைப் பற்றியது. பூண்டைக் கொதித்த வைத்து அந்த நீரை அருந்தி வந்தால், அது கொரோனா பாதிப்புக்கு தடுப்பு மருந்தாக அமையும் என்பதுதான் தமிழ்நாட்டில் அதிகம் பரவிய வதந்தி. பூண்டு, மஞ்சள் இவையெல்லாம் கிருமிநாசினி என்பது உண்மைதான். அதனால் அதைக் கொதிக்க வைத்து குடித்தால் கொரோனா வராது என்பதெல்லாம் ”பாவம் மை சன்” ரகம்.  • சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவியதாக கிளம்பிய வதந்தியால் வீடுகளில் அச்சம் புகுந்தது. இதன் உண்மையைப் பார்க்கலாம், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையின்படி, விலங்குகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்கள். இந்த நாள் வரை விலங்குகளிலிருந்து கொரோனா பரவுகிறது என்றோ, கோழிகளிடமிருந்து பரவுகிறது என்றோ எந்த அதிகாரப்பூர்வ நிறுவனமும் தெரிவிக்கவில்லை.


வதந்திகளைப் பரப்பாதீர்கள். மற்றொருவருக்கு ஒரு செய்தியைத் தெரிவிப்பதற்கு முன்னதாக சிந்தியுங்கள், சரிபாருங்கள். யாரோ ஒருவரின் வதந்தி மனநிலைக்காக பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தாதீர்கள்.

Also See...
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்