ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நோயாளியை பிடித்து கொடுத்தால் ₹50,000 சன்மானம்; மருத்துவமனையின் தீபாவளி சலுகைக்கு குவியும் பாராட்டு

நோயாளியை பிடித்து கொடுத்தால் ₹50,000 சன்மானம்; மருத்துவமனையின் தீபாவளி சலுகைக்கு குவியும் பாராட்டு

மாதிரி படம்

மாதிரி படம்

காச நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வருபவருக்கு ரூபாய் 500 லிருந்து 50,000 வரை ரொக்கம் பரிசளிக்கப்படும் என மத்திய பிரதேச மாநிலத்தின் அகர மால்வா மாவட்டத்தின் மருத்துவ துறை அறிவித்துள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி நெருங்கி வரும் வேளையில் அனைவரும் தீபாவளி சலுகைகளை எதிர்பார்த்து வருகின்றனர். இந்த தீபாவளி சலுகை பயன்படுத்தி பலர் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் மேலும் சிலர் கார் சமையலறைக்கு தேவையான பொருட்கள் விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் என பலவற்றை வாங்குவார்கள் ஆனால் எப்பொழுதாவது மருத்துவமனை ஒன்று தீபாவளி சலுகை அறிவித்து கேள்விப்பட்டு உள்ளீர்களா. ஆம் மத்திய பிரதேசத்தில் உள்ள அகர் மால்வா மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான அறிவிப்பு ஒன்று மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

  அகர் மால்வா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவத்துறை புதிய வித்தியாசமான முயற்சியை தொடங்கி வைத்துள்ளது. அதில் காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு வரும் நபருக்கு ரூபாய் 500 லிருந்து 50,000 வரை ரொக்கம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. காச நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது மேலும் இதனால் மக்கள் தங்களுக்கு காசநோய் இருப்பதை மறைத்து வைத்திருக்க மாட்டார்கள் என்றும் சரியான சிகிச்சை பெற்று காச நோய் பரவுவதை தடுப்பதற்கு வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

  இந்த மிகப்பெரிய பம்பர் பரிசு தீபாவளி சலுகையாக அகர் மால்வா மாவட்டத்தின் மருத்துவத்துறை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் காச நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துவரும் நபருக்கு தான் ரூபாய் 500 லிருந்து 50 ஆயிரம் வரை இருக்கும் பரிசாக வழங்கப்படும் தவிர காசநோய் பாதிக்கப்பட்டவருக்கு அல்ல.

  இந்த அறிவிப்பை போஸ்டர் அடித்து மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் அடிப்படையில் தீபாவளி சலுகையாக இத்திட்டத்தினை மருத்துவத்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு நபர் அழைத்துவரும் காச நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு சன்மானமானது வழங்கப்படும். நோயாளியை மருத்துவமனையில் சேர்த்தால் அவருக்கு 500 ரூபாய் அல்லது டிபன் பாக்ஸ் வழங்கப்படும். ஐந்து நோயாளிகள் வரை கொண்டு வந்து சேர்ந்த நபருக்கு 2500 ரூபாய் அல்லது வீடுகளில் சமையல் வேலைகள் செய்ய பயன்படுத்தப்படும் மிக்சர் இயந்திரம் பரிசளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

  Also Read : பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் சாலை விபத்தில் படுகாயம்.. திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதி

  பத்து நோயாளிகள் வரை கொண்டு வரும் நபருக்கு 5000 ரூபாய் அல்லது மொபைல் போன் வழங்கப்படும். 15 நோயாளிகள் வரை மருத்துவமனைக்கு அழைத்து வருபவருக்கு 7 ஆயிரத்து 500 மதிப்புள்ள சில்வர் நாணயமும் அல்லது 10 கிராம் மதிப்புள்ள தங்கம் வழங்கப்படும் என அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் இதைபற்றி செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இணையவாசிகள் பலர் இதனை கிண்டல் செய்தும் மேலும் பலர் இத்திட்டத்தினை பாராட்டியும் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral