முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 2 குலாப் ஜாமுன் ரூ.400.. தள்ளுபடி பெயரில் ஷாக் கொடுத்த சொமேட்டோ!

2 குலாப் ஜாமுன் ரூ.400.. தள்ளுபடி பெயரில் ஷாக் கொடுத்த சொமேட்டோ!

ZOMATO

ZOMATO

அசல் விலையே அதிகம். அதை விட பன்மடங்காக விலையை சுட்டிகாட்டி அதில் பெரும் தள்ளுபடியை வழங்குவது போல செய்யும் இச்செயல் சரியானதா?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jaipur |

ஆன்லைன் விற்பனை வலைத்தளங்களில் விலையை பன்மடங்கு ஏத்திவிட்டு பின்னர் சலுகை போடும் நிகழ்வுகளை எல்லாம் ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால் உணவு  பொருட்கள் டெலிவரியில் அப்படி அதிகம் பார்த்ததில்லை. விலை ஏற்றத்தை தான் பார்த்திருக்கிறோம்.

ரோட்டு கடையில் 30 ரூபாய்க்கு சாப்பிடும் தோசை 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறதே என்று புலம்பி இருப்போம்.  ஆனால் ஜெய்ப்பூரில் ஒரு உணவகம் மக்களுக்கு  அளித்த 80% சலுகை உங்களை நிச்சயம் அதிர்ச்சி அடைய செய்யும். 80% தள்ளுபடி என்றால் நல்லது தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதற்கு முன்னர் தான் சம்பவமே இருக்கிறது. ஜெய்ப்பூரில் உள்ள பூபேந்திரா என்பவர் அங்குள்ள பிரியாணி ப்ரதர்ஸ் என்ற கடையில் Zomato மூலம் குலாப் ஜாமூனை ஆர்டர்  சென்றுள்ளார். அதன் விலை பட்டியலை பார்த்து அதிர்ந்த அவர் அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  அதில் இரண்டு குலாப் ஜாமூன்களின் அசல் விலை ரூ. 400 என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அதன் விலை, தாராளமான 80% தள்ளுபடிக்குப் பிறகு  ரூ. 80 என்று குறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, 200 கிராம் கஜர் அல்வாவின் எனப்படும் கேரட் ஆல்வா  விலை ரூ. 600 என்று குறிப்பிட்டுள்ளனர். என்ன வகையான பணவீக்கம் உணவு விற்பனை நிலையத்தை பாதித்தது?  இப்படியான விலையேற்றம் ஏற்பட்டுள்ளதே  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“2 குலாப் ஜாமூன் 400 ரூபாய், ஒரு கிலோ கஜர் அல்வா 3000 ரூபாய் , அதன் பிறகு 80% தள்ளுபடி. இது மிகவும் மலிவானது என்று நம்ப முடியவில்லை. நான் உண்மையில் 2023 இல் தான் வாழ்கிறேனா? #Zomato 2023 இல் வாழும் மக்களுக்கு மிகவும் தாராளமாக இருக்கிறது, ”என்று அந்த மனிதனின் கிண்டலான கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

இதை போல் மற்றொரு சம்பவத்தை இன்னொரு பயனர் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு கோல்டு காபியை 1000 ரூபாய் என்று போட்டுவிட்டு பின்னர் தள்ளுபடி என்ற பெயரில் விலையை குறைத்து 120 ரூபாய் என்று போட்டுள்ளனர். இது என்ன ஏமாற்றுவேலை என்று அவர் கேள்வி எழுப்பினார். இதன் அசல் விலையே அதிகம். அதை விட பன்மடங்காக விலையை சுட்டிகாட்டி அதில் பெரும் தள்ளுபடியை வழங்குவது போல செய்யும் இச்செயல் சரியானதா? இதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கமுடியும் என்று உணவு நிறுவனங்கள் நம்புகிறதா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பூபேந்திரா டிவீட்டுக்கு பதிலளித்துள்ள zomato நிறுவனம், “வணக்கம் பூபேந்திரா, நாங்கள் இதை சரிபார்க்க விரும்புகிறோம். தயவுசெய்து உணவக விவரங்களை ஒரு தனிப்பட்ட செய்தி வழியாகப் பகிரவும், அவற்றின் விலைகளை உறுதிப்படுத்த நாங்கள் உணவகத்தைத் தொடர்புகொள்வோம்" என்று தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Zomato