ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கார் விலையே ரூ.11 லட்சம்தான்.. சர்வீஸ் பாக்க ரூ.22 லட்சமா? பெங்களூருவில் நடந்த சம்பவம்

கார் விலையே ரூ.11 லட்சம்தான்.. சர்வீஸ் பாக்க ரூ.22 லட்சமா? பெங்களூருவில் நடந்த சம்பவம்

வைரலாகும் பதிவு

வைரலாகும் பதிவு

வாகனங்கள் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் நமக்கு ஒரு கஷ்டமும் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆயில் மாற்றுவது, டயர்களை மாற்றுவது, பேட்டரி மாற்றுவது என வழக்கமான செலவுகளை செய்து கொண்டு கடந்து போய் விடலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாகனங்கள் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் நமக்கு ஒரு கஷ்டமும் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆயில் மாற்றுவது, டயர்களை மாற்றுவது, பேட்டரி மாற்றுவது என வழக்கமான செலவுகளை செய்து கொண்டு கடந்து போய் விடலாம்.

  ஆனால், அதுவே வாகனங்களில் வழக்கத்திற்கு மாறான கோளாறுகள் ஏற்பட்டு விட்டால் போதும். பழுதடைந்த பாகங்களை மாற்றுவதற்கான செலவு, அதற்கான சர்வீஸ் சார்ஜ் என பெரும் தொகை செலவாகிவிடும். அதுவும் மழைக்காலம் வந்து விட்டால் போதும். தண்ணீர் மற்றும் சேறு நமது வாகனத்தை சூழ்வதன் காரணமாக பல்வேறு பழுதுகள் ஏற்படுகின்றன.

  பெங்களூரில் கனமழையால் வாகனங்கள் சேதம்

  அண்மையில் பெங்களூரு மாநகரம் மிக மோசமான வெள்ள பாதிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக பல இடங்களில் முழங்கால் உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில் எண்ணற்ற மக்கள் அவதியடைந்தனர். விமானங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. பேருந்துகள் உள்பட அனைத்து விதமான போக்குவரத்துகளும் முடங்கிய நிலையில், பல இடங்களில் படகுப் போக்குவரத்து செயல்படுத்தப்பட்டது.

  Read More : உயிருடன் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு.. ஆட்டை வெளியே இழுக்கும் பதறவைக்கும் வீடியோ

  தரை தளத்தில் வீடுகளை வைத்திருந்தவர்களும், வாகனங்களை நிறுத்தியவர்களும் மிகுந்த பாதிப்புகளை எதிர்கொண்டனர். பல கார்கள் பகுதியளவுக்கு நீரில் மூழ்கியதால் சேதம் அடைந்தன. இதில் கார் உரிமையாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், கார்களை பழுது நீக்க வேண்டும் என்று சர்வீஸ் சென்டர்களை அணுகினால், அங்கு வசூலிக்கப்படும் பில் தொகை தலையை சுற்ற வைப்பதாக அமைந்துள்ளது.

  ரூ.22 லட்சம் எஸ்டிமேட் தொகை

  வெள்ளத்தில் மூழ்கியதால் அனிருத் கணேஷ் என்பவரின்  போலோ கார் பழுதடைந்தது. இதைத் தொடர்ந்து ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள வோக்ஸ்வேகன் நிறுவன சர்வீஸ் மையத்தை அவர் அணுகினார். அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், மீட்பு வாகனத்தின் உதவியோடு காரை சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் சென்றார்.

  அதிர்ச்சி தந்த சர்வீஸ் மையம்

  அனிருத் தனது காரை விட்டு வந்த பிறகு 20 நாட்கள் கழித்து தான் சர்வீஸ் மையத்தில் இருந்து பதில் அளித்தனர். அதுவும் ரூ.22 லட்சத்திற்கு எஸ்டிமேட் கொடுத்துள்ளனர். இதைக் கேட்டு அனிருத் அதிர்ச்சி அடைந்தார். காரணம் காரின் விலையே ரூ.11 லட்சம் தானாம்.

  உறுதியளித்த இன்சூரன்ஸ் நிறுவனம்

  இதற்கிடையே, அனிருத் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகினார். கார் முழுவதும் பாதிக்கப்பட்டதாகக் கருதி, அதை அவர்கள் திரும்ப எடுத்துக் கொள்வதாக கூறியிருக்கின்றனர். ஆனால், சர்வீஸ் மையத்தில், வாகனத்தின் பழுதுகளுக்கு சான்றளிக்க ரூ.44,840 செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

  இதுதொடர்பாக வோக்ஸ்வேகன் நிறுவனத்தை இமெயில் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக அனிருத் அணுகினார். ஆனால், வெகு நாட்களாக எந்தப் பதிலும் இல்லை. தொடர் முயற்சிகளின் பலனாக, வாகன பழுது சான்றளிப்பதற்கான கட்டணம் ரூ.44,840 என்ற மதிப்பில் இருந்து ரூ.5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் அணுப்பியுள்ளனர். கார் முழுமையாக பழுதானால், அதற்கு சான்றளிக்க அதிகபட்ச கட்டணமே ரூ.5,000 தான் என்று வோக்ஸ்வேகன் நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டதாக அனிருத் தெரிவித்தனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Bangalore, Trending, Viral