சாலைகளில் 'டுப்பு டுப்பு டுப்பு' என்கிற சத்தம் கேட்டால் போதும் அனைவருக்குமே தெரியும் - அங்கே ஒரு 'புல்லட்' வருகிறது அதாவது ஒரு ராயல் என்ஃபீல்டு வருகிறது மற்றும் அனைவரின் கழுத்தும், கவனமும் அதை நோக்கி திரும்ப போகிறது என்று!
ராயல் என்ஃபீல்டு - ஆண், பெண், சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி அனைவரும் சொந்தமாக்கி கொள்ள வேண்டும், "சும்மா கெத்தாக" அதில் பயணிக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகும்.
இந்த அளவிற்கு மிகவும் பிரபலத்தன்மை கொண்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்தது, அதோடு நில்லாமல் சினிமா படங்களில் வருவது போல வெடித்து சிதறி, வானுயுர தீப்பிழம்பை வீசியது என்று கூறினால் உங்களின் எண்ண ஓட்டங்கள் எம்மாதிரியாக இருக்கும்?
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து, பின் வெடிக்கும் வீடியோ ஓன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும் எவருக்குமே அதிர்ச்சியாகவே இருக்கும், குறிப்பாக ராயல் என்ஃபீல்டு பைக்கை வைத்திருக்கும் ஓனர்களுக்கு இந்த வீடியோ வயிற்றில் புளியை கரைக்கும் என்றால் அது மிகையாகாது!
also read : Google Maps-இல் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பாம்பின் எலும்புக் கூடு - வைரல் போட்டோ
மொத்தம் 22 வினாடிகள் மட்டுமே கொண்ட குறிப்பிட்ட வீடியோவின் தொடக்கத்திலேயே கோவில் வளாகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள ஒரு ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிவதை பார்க்க முடிகிறது. மேலும் எரிந்து கொண்டு இருக்கும் பைக்கை, சற்றே தூரமாக நின்று சிலர் வேடிக்கை பார்ப்பதையும் பார்க்க முடிகிறது. பிறகு கண் இமைக்கும் நேரத்தில் அந்த ராயல் என்ஃபீல்டு பைக் பெரும் சத்ததுடன் வெடிக்கிறது. அது வெடிக்கும் என்பதை சற்றும் எதிர்பாராத மக்கள் அங்கிருந்து தெறித்து ஓடுகின்றனர். இந்த வெடிப்பின் விளைவாக ஏற்பட்ட தீப்பிழம்பானது அருகில் இருந்த ஒரு மரத்தின் உயரத்திற்கு ஈடாக செல்வது வீடியோவில் பதிவாகி உள்ளது.
కసాపురంలో బుల్లెట్ బండి మైసూరు నుండి కసాపురం కు నాన్ స్టాప్ గా వచ్చినందుకు పేలిపోయింది #guntakal #RoyalEnfield #Bullet #bike #fire #ACCIDENT #RoyalsFamily #RoyalEnfield pic.twitter.com/GGaRAnCY5x
— Allu Harish (@AlluHarish17) April 3, 2022
அதிர்ஷ்டவசமாக ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த மோட்டார் சைக்கிள் வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. துரதிர்ஷ்டமான சம்பவம் என்னவென்றால், வெடிப்புக்கு உள்ளன மோட்டார் சைக்கிள் ஒரு புதிய ராயல் என்ஃபீல்ட் பைக் ஆகும். இந்த பைக்கின் உரிமையாளர் ரவிச்சந்திரா என்பவர் ஆவார். இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூருவில் இருந்து சுமார் 387 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு வருவதற்காக வழியில் எங்கும் நிற்காமல் பைக்கை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார், சரியாக கோவிலுக்குள் நுழையும் போது வாகனத்தில் தீப்பிடித்துள்ளது, பிறகு வெடித்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம், சில நாட்களுக்கு முன்பு, ஹைதராபாத் ஸ்டார்ட் அப் ப்யூர் இவி தயாரித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று சென்னை அருகே தீப்பிடித்து எரிந்தது, இந்நிகழ்வு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ள நிலைப்பாட்டில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து, பின் வெடித்துள்ள சம்பவம் வாகன ஒட்டிகளின் மத்தியில் பெரும் சலசலப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral Videos