• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Rolls Royce: இண்டீரியர் மாடிபிகேஷனுக்காக பறிமுதல் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்!

Rolls Royce: இண்டீரியர் மாடிபிகேஷனுக்காக பறிமுதல் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்!

ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ்

இண்டீரியர் மாடிபிகேஷன் காரணமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
ஒரே ஒரு மாடிஃபிகேஷன் செய்ததற்காக விலையுயர்ந்த ரோல்ஸ் ராய் கார் இத்தாலியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யும் அளவிற்கு அந்தக் காரில் செய்த மாடிஃபிகேஷன் தான் என்ன?

பொதுவாக கார்கள் அனைத்தும் வெளிப்புறம், உட்புறம் என அனைத்தும் ஒரே மாதியான வடிவமைப்பிலேயே நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் அவை தனித்தும் தெரியும் வகையில் சிலர் மாடிஃபிகேஷன்களை செய்து தனித்துவமாக்கி மகிழ்கின்றனர். இதற்கென்றே பிரத்யேக நிறுவனங்கள் இத்துறையில் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு நாடுகளின் போக்குவரத்து துறையும்  மாடிபிகேஷனுக்கென சில விதிமுறைகளை வகுத்துள்ளனர். அந்த மாடிபிகேஷன்கள் குறித்து போக்குவரத்துறையினரின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியாக இருக்காது. அனைத்துமே விஷேச கலவையில், பிரத்யேக வண்ணங்களில் வெளி வருகின்றன.

அதுவும் போதாதென்று சிலர் அக்கார்களையும் மாடிபிகேஷன் செய்து வருகின்றனர்.  அந்த வகையில் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் மாடல் கார் ஒன்று ரஷ்யாவிலிருந்து இத்தாலியைச் சேர்ந்த நிறுவனத்தார் இறக்குமதி செய்த நிலையில் அந்த காரில் இருந்த இண்டீரியர் மாடிபிகேஷன் காரணமாக சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by Agenzia Dogane e Monopoli (@adm_gov)






ரோல்ஸ் ராய்ஸ் காரின் லெதர் வேலைப்பாடுகள் லெதரால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மிக அரிதான முதலையின் தோல் அதற்காக பயன்படுத்தப்பட்டிருப்பதை இத்தாலிய சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.

Also Read:   உலகின் முதல் அந்தரத்தில் மிதக்கும் நீச்சல் குளம் - வைரலாகும் வீடியோ!

இது ஆபத்தான உயிரினங்களில் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டின் CITES ஒப்பந்தத்தை மீறும் செயல். எனவே அக்காரை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

சர்வதேச விதிகளை மீறியிருப்பதால் அந்தக் காரின் சொந்தக்காரர் மிக அதிக அளவிலான அபராதத் தொகையை செலுத்த வேண்டியதிருக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: