• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வெளிநாட்டு வீதிகளில் நடமாடும் ரோபோக்கள்... உணவு டெலிவரிக்காக புதிய முயற்சி!

வெளிநாட்டு வீதிகளில் நடமாடும் ரோபோக்கள்... உணவு டெலிவரிக்காக புதிய முயற்சி!

வீதிகளில் நடமாடும் ரோபோ

வீதிகளில் நடமாடும் ரோபோ

ஸ்டார்ஷிப் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி அலஸ்டர் வெஸ்ட்கார்த் கூறியதாவது, " ரோபோ பயன்பாட்டிற்கான தேவை அதிகரித்து வருவதை நாங்கள் கண்டோம். அதன் தேவை எப்போதும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

  • Share this:
இந்த நவீன காலத்தில் பல தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், நம் அன்றாட வாழ்க்கையில் ரோபோக்கள் பெரிதாக இடம் பெறவில்லை. ஒரு சில உணவகங்களில் ரோபோக்களை நம்மால் காண முடிகிறது. ஆனால் தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் சமூக விலகலை பராமரிக்கவும், மக்களின் நேரடி தொடர்புகளை தடுக்கவும் ரோபோக்களின் பயன்பாடு ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் யு.கே நாடுகளில் உள்ள பல இடங்களில் உணவு டெலிவரி செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முழங்கால் உயரமே கொண்ட நூற்றுக்கணக்கான சிறிய ரோபோக்கள் பல யு.எஸ்., யு.கே நாடுகளில் உள்ள கல்லூரி வளாகங்கள், சில நகரங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் நாம் வலம் வருகின்றன. இந்த சிறிய ரோபோக்கள் நான்கு பெரிய பீஸ்ஸாக்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை. தற்போது சில நகரங்களின் நடைபாதைகளில் கூட இவற்றை காண முடியும். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன் ரோபோக்கள் குறைந்த எண்ணிக்கையில் சோதிக்கப்பட்ட நிலையில், தொற்றுநோய் தொடர்பான தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் தொடர்பு இல்லாத விநியோகத்திற்கான வளர்ந்து வரும் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள் ரோபோக்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக, சமீபத்தில் தனது 2 மில்லியன் விநியோகத்தை முடித்த ஸ்டார்ஷிப் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி அலஸ்டர் வெஸ்ட்கார்த் கூறியதாவது, " ரோபோ பயன்பாட்டிற்கான தேவை அதிகரித்து வருவதை நாங்கள் கண்டோம். அதன் தேவை எப்போதும் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் அது தற்போதைய தொற்றுநோயால் முன்னோக்கி கொண்டு வரப்பட்டது. ஸ்டார்ஷிப் நிறுவனம் அதன் நிறுவனத்தில் 1,000க்கும் மேற்பட்ட ரோபோக்களைக் தயாரித்து வருகிறது. இது 2019ம் ஆண்டில் வெறும் 250 ஆக இருந்தது.

மேலும் அதில் நூற்றுக்கணக்கானவை விரைவில் பயன்படுத்தப்படும் எனவும், தற்போது 20 அமெரிக்க வளாகங்களில் உணவு விநியோகம் செய்து வருகின்றன" என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 25 உணவு வளாகங்களில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதுதவிர இந்த ரோபோக்கள் இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸில் நடைபாதைகளிலும், மொடெஸ்டோ, கலிபோர்னியா; மற்றும் நிறுவனத்தின் சொந்த ஊரான டாலின், எஸ்டோனியா போன்ற பகுதிகளிலும் வலம் வருகின்றன.

இருப்பினும், இந்த ரோபோக்கள் அனைத்தும் வடிவமைப்புகளில் வேறுபடுகின்றன. சிலவற்றில் நான்கு சக்கரங்கள் மற்றும் சிலவற்றில் ஆறு உள்ளன. அதேபோல, இந்த ரோபோக்கள் அனைத்தும் கேமராக்கள், சென்சார்கள், ஜிபிஎஸ் மற்றும் சில சமயங்களில் லேசர் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி நடைபாதைகளில் செல்லவும் மற்றும் தெருக்களைத் தன்னாட்சி முறையில் தானாக கடக்கின்றன. இந்த ரோபோக்கள் அனைத்தும் 5 மைல் வேகத்தில் நகரும்.

ஒரே நேரத்தில் பல ரோபோக்களில் கட்டுப்படுத்தும் திறன் ரிமோட் ஆபரேட்டர்களிடம் இருக்கும். ஆனால், அவற்றிற்கான உபயோகம் பெரிதாக இருந்ததில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேக் அடிப்பது, தடையை சுற்றி செலாவது போன்ற விஷயங்களுக்கு மட்டும் ஆபரேட்டர்கள் உதவி தேவைப்படுகிறது. அதுவும் மிக அரிதாகவே பயன்படுத்தப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Also read... அமெரிக்க பெண்ணுக்கு வித்தியாசமான நோய் - மருத்துவர்கள் குழப்பம்!

உணவு டெலிவரி செய்யும் ஒரு ரோபோ அதன் இலக்கை அடைந்த பிறகு, ​​ரோபோவின் மூடியைத் திறந்து தங்கள் உணவைப் பெற வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் அவர்களுக்கு கிடைக்கும் குறியீட்டு எண்ணை டைப் செய்ய வேண்டும். என்னதான் இருந்தாலும் இந்த ரோபோக்களில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அது என்னவென்றால் மின்சாரம் தான். அதுவே இவற்றின் பயன்பாடுகளை இப்போது குறைக்கின்றன. ஏனெனில், இந்த ரோபோக்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும். மேலும் இந்த செயல்முறை மிக மெதுவாக இருக்கும். அதேபோல அவை உணவு டெலிவரி செய்யும் நபர்களின் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு முழுதாக வழங்குவதில்லை.

எடுத்துக்காட்டாக, உணவை கதவுக்கு வெளியே விட்டுவிடுமாறு வாடிக்கையாளர் ரோபோவிடம் கூற முடியாது. நியூயார்க், பெய்ஜிங் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நெரிசலான நடைபாதைகளைக் கொண்ட சில பெரிய நகரங்களில் இந்த உணவு டெலிவரி ரோபோக்களை பயன்படுத்த முடியாது. இருப்பினும், இவை நெரிசல் அல்லாத நகரங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் பயன்படுத்த எளிதானவை என்று ரோபோ நிறுவனங்கள் கூறி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: