எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறையினருக்கான ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. செவ்வாய் மற்றும் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் வகையில், ஸ்பேஷிப் ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நேற்று டெக்சாஸில் உள்ள போகா சிகாவில் இருந்து ‘ஸ்டார்சிப் எஸ்என்–10 (Starship SN – 10) ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் அனுப்பப்பட்டது. ஏற்கனவே இதுபோன்ற ஸ்பேஸ்ஷிப் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்து பார்த்தது. ஆனால் அந்த ராக்கெட்டுகள் இரண்டும் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறின. இந்நிலையில் மூன்றாவது முறையாக, முந்தைய குறைபாடுகளைச் சரிசெய்து, ‘ஸ்டார்சிப் எஸ்என்–10’ என்ற ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தி சோதனை செய்தது. ஆளில்லாமல் அனுப்பப்பட்ட இந்த ராக்கெட், வெற்றிகரமாக தன்னுடைய இலக்கை அடைந்தது. மீண்டும் ஸ்பேஸ் எக்ஸ் தரைதளத்தை அடைந்த சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்துச் சிதறியது.
இந்த ராக்கெட் வெடிப்பு குறித்து பேசிய எலான் மஸ்க், ‘ஸ்டார்சிப் எஸ்என்–10’ ராக்கெட், சோதனை ஓட்டத்தில் எங்களுக்குத் தேவையான ஆய்வு விவரங்களை சேகரித்து கொடுத்துள்ளதாகவும், அதுவே எங்களுக்கான வெற்றி எனவும் கூறியியிருந்தார். இந்நிலையில், எஸ்.என் 10 (SN10) ராக்கெட் வெடித்து சிதறிய இடத்தில், ராக்கெட்டின் பாகங்களை சேகரிக்கும் பணியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டது. அப்போது, ராக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த ஜீசஸ் என்ற நாய் வடிவிலான ரோபோட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த ரோபோட்டின் மதிப்பு சுமார் 75,000 டாலர் என கூறப்படுகிறது.
ஜீசஸ் ரோபோட் முன்னுள்ள தடைகளை தகர்த்துவிடும். மேலும், கதவுகளை திறக்கும், படிகட்டுகளில் ஏற முடியும், காலநிலையை அறிந்து அதற்கான வரைபடத்தை அதனால் உருவாக்க முடியும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய எஸ்.என்.10 ராக்கெட் வெடித்து சிதறும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. அதில், வெற்றிகரமாக புகையைக் கக்கியவாறு ஏவிப்பட்ட ராக்கெட், தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக வெடித்த காட்சிகள் உள்ளன. தீப் பிழம்புகளும், புகையும் அந்த அப்பகுகளை ஆக்கிரமித்துள்ளது. ராக்கெட் ஏவப்படும் வீடியோவும், வெடித்து சிதறும் காணொளியும் யூ டியூப் (Youtube) தளத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. மனிதர்களை விண்ணுக்கு எளிமையாக சென்று வரும் வகையிலான ராக்கெட்டுகளை உருவாக்கும் முனைப்பில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உறுதியுடன் கூறியுள்ளார். மேலும், 2023 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பில்லியனர் யூசாகு மெய்சாவா (Yusaku Maezawa) உடன் இணைந்து நிலாவைச் சுற்றி வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.