சுவையான உணவு எங்கு கிடைத்தாலும் தேடி தேடி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் பலர் உள்ளனர். நீண்ட தூரம் பயணம் செய்து வந்து சுவையான உணவை ருசிக்க பலருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த உணவு எந்த ஹோட்டலில் கிடைத்தாலும் அதன் சுவையே தனிதான்.
பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்காத டேஸ்ட் கூட சாலையோரம் உள்ள உணவங்களில் கிடைக்கும். சாலையோர இருக்கும் உணவங்களில் காசு குறைவு என்பதால் அதனை சாப்பிடுபவர்களை விட அதன் சுவைக்காகவே பலர் சாப்பிட வருபவர்கள். சாதாரண வேலை செய்பவர்கள் முதல் ஆடம்பார காரில் வருபவர்கள் கூட சாலையோர உணவங்களில் சாப்பிட்டு செல்வதை நாம் வழக்கமாக பார்க்க முடியும்.
Also Read : எனக்காக ரொம்ப கஷ்டப்படுறா... வாழ்நாள் முழுதும் யாசித்த பணத்தில் மனைவிக்காக மொபட் வாங்கிய கணவர்
ஆனால் சாலையோர உணவங்களில் பலர் சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு காரணம் அசுத்தம் மட்டுமே காரணமாக இருக்கும். பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் இப்படி தான் இருக்கும், அங்கு சமைப்பதை நாம் நேரில் பார்த்திருக்குமா என்று பலர் அதை சகஜமாக எடுத்து கொள்வார்கள். ஆனால் சில சம்பவங்களை நேரில் பார்க்கும் போது அங்கு சாப்பிடும் ஆசையே விட்டு விடும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சாலையோர உணவக ஊழியர் பாத்திரங்களை கல்வாயில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கழுவி ஊற்றுகிறார். இந்த வீடியோவை அங்கு இருக்கும் ஒருவர் எடுத்துள்ளார். சாலையோர உணவகம் ஊழியர் எந்தவித சங்கடம் இல்லாமல் அந்த பாத்திரங்களை கழுவி வைக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது இதுப்போன்ற கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பதே நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மையாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.