ஆண்டுக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டும் சமோசா வியாபாரி: ஐடி ரெய்டு

Web Desk | news18
Updated: June 25, 2019, 9:35 PM IST
ஆண்டுக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டும் சமோசா வியாபாரி: ஐடி ரெய்டு
முகேஷ் கச்சோரி
Web Desk | news18
Updated: June 25, 2019, 9:35 PM IST
உத்தர பிரதேசம் அலிகாரில் தெருவோரம் வைக்கப்பட்டிருக்கும் சின்னக் கடையில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதில் ஆண்டுக்கு 60 லட்சம் முதல் ஒரு கோடி வரை வருமானம் ஈட்டுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலிகாரில்  'முகேஷ் கச்சோரி' என்று அழைக்கப்படும் சாட் ஷாப், சீமா சினிமா ஹால் அருகில் அமைந்துள்ளது. அங்கிருக்கும் மக்களால் மிகவும் விரும்பப்படும் இந்த கடையின் சுவைதான் முகேஷின் வளர்ச்சிக்குக் காரணம்.
இங்கு விற்கப்படும் கச்சோரி மற்றும் சமோசாவிற்குக் கூடும் மக்களின் எண்ணிக்கை திருவிழா போல் காட்சியளிக்கும். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு முறை சுவைத்தாலே அடுத்தடுத்து வரத் துவங்கிவிடுவார்கள்.


எல்லாம் சிறப்பாகச் சென்று கொண்டிருந்த தருணத்தில் தொழில் போட்டிக் காரணமாக யாரோ வணிக வரித் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதைக் கண்டறிய வருமான வரித்துறையினர் குழுவாகச் சென்று முகேஷ் கடைக்கு எதிரே இருக்கும் மற்றொரு கடையில் நாள் முழுவதும் அமர்ந்து வியாபாரத்தைக் கண்காணித்துள்ளனர். அவர்கள் கண்காணித்ததில் முகேஷ் ஆண்டுக்கு 60 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பாதிக்கும் வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டது.
பின் முகேஷுக்கு வருமான வரித்துறையினரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஜி.எஸ்.டி.க்குக் கீழ் கடையைப் பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Loading...இது குறித்து முகேஷ் “எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. கடந்த 12 வருடங்களாக இந்த கடையை நடத்தி வருகிறேன். இப்படி சட்ட விதிமுறைகள் இருப்பதே எனக்குத் தெரியாது. யாரும் எனக்குச் சொல்லிக்கொடுக்கவும் ஆள் இல்லை. சமோசா , கச்சோரி வியாபாரம் செய்யும் சிற்றறிவு கொண்ட வியாபாரி நான்" என்று கூறியுள்ளார்.

மாநில புலனாய்வு பணியாக்கக் குழுவிடம் இது குறித்துக் கேட்ட போது “ இனி முகேஷ் தனக்கு வரும் வருமானத்தைக் கணக்குக் காட்ட வேண்டும். அவர் பயன்படுத்தும் பொருட்கள், எண்ணெய், சிலிண்டர் என அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் " என்று கூறினர்.

மேலும் எஸ்.ஐ.பி. படி 40 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் கட்டாயம் ஜி.எஸ்.டிக்குக் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். தயாரிக்கப்படும் உணவுகளுக்கு ஐந்து சதவீத ஜி.எஸ்.டி கட்டாயம். எனவே முகேஷன் ஜி.எஸ்.டி பதிவு செய்ய வேண்டும். ஒரு வருடத்திற்கான வரி கட்ட வேண்டும் என எஸ்.ஐ.பி. சம்மன் அனுப்பியுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...