ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங், ஹை இன்டன்சிட்டி பயிற்சிகள்... - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் சொன்ன ஃபிட்னஸ் சீக்ரெட்!

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங், ஹை இன்டன்சிட்டி பயிற்சிகள்... - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் சொன்ன ஃபிட்னஸ் சீக்ரெட்!

ரிஷி சுனாக்

ரிஷி சுனாக்

கிரீக் யோகர்ட், மற்றும் ப்ளூபெர்ரிகளை மதிய நேரத்தில் சாப்பிடுவார். அதே போல, சாக்லேட் சேர்த்து செய்யப்பட்ட கேக், மஃபின் போன்ற உணவுகளையும் விரும்பி சாப்பிடுவார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்தில் முதல் முதலாக பிரதமராகப் பதவி ஏற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்படத்தக்கது. பல ஆண்டுகளாக, ரிஷி சுனாக்கின் பெயர் பிரதமர் பதவிக்கு கூறப்பட்டு வந்ததை அடுத்து தற்போது பிரதமர் ரிஷி சுனாக் யார், என்ன செய்து கொண்டிருக்கிறார், குடும்பம் என்று முழு வரலாறும் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் இனஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார் ரிஷி சுனாக். இவருக்கு கிருஷ்ணா சுனாக் என்ற மகனும், அனோஷ்கா சுனாக் என்ற மகளும் உள்ளனர்.

ரிஷி சுனாக்கின் தலைமைப் பண்பு பற்றி ஏற்கனவே தெரிய வந்த நிலையில், இந்த வயதிலும் ஃபிட்டாக இருக்கிறார் என்பது ஊக்கமாக இருந்து வருகிறது. புதிய பிரதமரின் ஃபிட்னஸ் என்பது இப்போது டிரெண்டாகும் விஷயமல்ல. கடந்த ஆண்டே, இவர் கலந்து கொண்ட ஒரு வீடியோ கான்ஃபரன்சில் தன்னுடைய தினசரி பழக்கவழக்கம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவம், உணவுப்பழக்கம், காலையில் எழும் நேரம் என்று தான் தவறாமல் பின்பற்றும் முறைகளைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

எவ்வளவு பரபரப்பான நாளாக இருந்தாலும் சரி, ஓய்வான நாளாக இருந்தாலும் சரி ரிஷி சுனாக் தினசரி காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் எழுந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதை தெரிவித்திருக்கிறார். அதுமட்டும் அல்லாமல், அன்றைய வேலை நாளுக்கு ஏற்றவாறு ஜிம்மில் எந்த விதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார் என்று தெரிவித்திருக்கிறார். தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிரெட்மில், ஹை இன்டன்சிட்டி பயிற்சிகள் உள்ளிட்ட பல விதமான உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருகிறார். இதுவே அவரது ஃபிட்னஸ் ரகசியம்.

உடற்பயிற்சி செய்வதை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்வது உடல் ஃபிட்டாக இருப்பதற்கு இருக்க உதவும். அதுமட்டுமில்லாமல் ரிஷி சுனாக்குக்கு ஒரு பர்சனல் ஃபிட்னஸ் பயிற்சியாளரும் இருக்கிறார். கோடி ரிக்ஸ்பை என்று அமெரிக்க உடற்பயிற்சி ஆலோசகர் இவருடைய இவருக்கு மிகவும் பிடித்தமான பயிற்சியாளர் என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது, சீரான உணவுப் பழக்கமும் முக்கியம். சமீபகாலமாக பிரபலமாகி வரும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்ற விரத முறையை ரிஷி சுனாக் நீண்ட நாட்களாக பின்பற்றி வருகிறார்.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்பது, ஒரு நாளில் தொடர்ச்சியாக 16 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, மீதமுள்ள 8 மணி நேரத்தில் சாப்பிடலாம். இதில் உங்களுக்கு வசதியான நேரத்தை தேர்வு செய்யலாம். இந்த விரத முறையை பின்பற்றும் ரிஷி சுனாக், காலையில் எதுவும் சாப்பிட மாட்டாராம். அதன் பிறகு, கிரீக் யோகர்ட், மற்றும் ப்ளூபெர்ரிகளை மதிய நேரத்தில் சாப்பிடுவார். அதே போல, சாக்லேட் சேர்த்து செய்யப்பட்ட கேக், மஃபின் போன்ற உணவுகளையும் விரும்பி சாப்பிடுவார்.

Also Read : உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் இருக்க போறீங்களா..? இந்த பழங்களை கண்டிப்பாக எடுத்துக்கோங்க...

வார இறுதி நாட்களில், குடும்பத்துடன் சேர்ந்து சமைத்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர். மேற்கத்திய நாடுகளில் பிரசித்தி பெற்ற பிரேக்ஃபாஸ்ட் உணவான பான் கேக்ஸ் மற்றும் வேஃபிளஸ் ஆகியவை இவரின் வார இறுதி நாட்களின் உணவாகும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Diet, Fitness, Rishi Sunak, Workout