Home /News /trend /

மடக்கி வைக்கப்படும் மாடிப்படி - வைரல் வீடியோ.!

மடக்கி வைக்கப்படும் மாடிப்படி - வைரல் வீடியோ.!

மாடிப்படி

மாடிப்படி

Staircase | வீட்டில் அதிக இடத்தை அடைத்து நிற்பதிலும், அதிக செலவு கொண்டதாக இருப்பதிலும் மாடிப்படிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதற்கு தீர்வு தரும் வகையில் தான் இப்போது ஃபோல்டிங் என்று சொல்லக் கூடிய மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாடிப்படி அறிமுகமாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சுமார் 30, 40 வருடங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் வாழ்க்கத் தரம் இன்றைக்கு வெகுவாக மேம்பட்டிருக்கிறது. பலதரப்பட்ட எலெக்ட்ரானிக் மற்றும் மோட்டார் பொருட்களால் நம் வாழ்க்கை எளிமையானதாகவும், சௌகரியம் மிகுந்ததாகவும் மாறியுள்ளது.

உதாரணத்திற்கு சாதாரணமாக மிக்ஸி, கிரைண்டரை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றின் வருகைக்கு முன்பாக அம்மிக்கல் மற்றும் ஆட்டுக்கல் பயன்படுத்தி மாவு, துவையல் போன்றவற்றை அரைப்பதற்கு மணிக்கணக்கில் நேரம் செலவானது. அத்துடன் பெண்களின் எனர்ஜி மிகுதியாக செலவானது.

ஆனால், காலப்போக்கில் மிக்ஸி, கிரைண்டர் வந்தாலும் அவை அளவில் பெரியதாக வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்துக் கொண்டு இருந்தது. இந்நிலையில், தற்போது வரக் கூடிய சாதனங்கள் காம்பாக்ட் என்று சொல்லக் கூடிய சிறிய அளவில் வர தொடங்கியுள்ளன.

இதேபோலத் தான் டிவி மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களும். தொடக்கத்தில் இவை வந்தபோது ஒரு அறையில் பாதி இடத்தை அடைக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் அளவில் சின்னதாக, அதே சமயம் மிக கூடுதலான பலன்களுடன் இவை வந்துவிட்டன.வீட்டில் இடத்தை அடைக்கு பர்னிச்சர்கள்:

மோட்டார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அடுத்தபடியாக நம் வீட்டில் பெரும்பகுதியை அடைக்கும் பொருட்களாக இருப்பவை பர்னிச்சர்கள் தான். இதனால் தான் இப்போது மடக்கி வைத்துக் கொள்ளும் அளவில் அல்லது ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் அளவில் பர்னிச்சர்கள் வரத் தொடங்கியுள்ளன. தேவையுள்ள சமயத்தில் மட்டும் அவற்றை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையற்ற நேரத்தில் சுருக்கி வைப்பதன் மூலமாக இடவசதி கிடைக்கும்.

Also Read : திருட முற்பட்டபோது உடனடி கர்மவினைப் பயனை அனுபவித்த பெண் - வீடியோ வைரல்!

இப்போது மாடிப்படியையும் மடக்கலாம்:

வீட்டில் அதிக இடத்தை அடைத்து நிற்பதிலும், அதிக செலவு கொண்டதாக இருப்பதிலும் மாடிப்படிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இடப்பற்றாக்குறை உள்ள நிலையில் மாடிப்படி அமைப்பதே பெரும் சிரமமாக இருக்கும். ஆனால், இதற்காக ஒவ்வொரு முறையும் ஏணி வைத்து ஏறிக் கொண்டிருக்க முடியுமா என்ன?

அதற்கு தீர்வு தரும் வகையில் தான் இப்போது ஃபோல்டிங் என்று சொல்லக் கூடிய மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாடிப்படி அறிமுகமாகியுள்ளது. இரும்புக் கம்பி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மெட்டீரியலில் படிகளை செய்து, அதனை சுவற்றோடு மடக்கி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் சமயத்தில் மட்டும் அவற்றை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இதுபோன்ற படியை ஒருவர் பொருத்தி, பயன்படுத்தி வரும் நிலையில், டிவிட்டரில் அதுகுறித்த வீடியோ டிரெண்ட் ஆகி வருகிறது.

Also Read : கணவரின் ஆசைக்காக திருநங்கையை திருமணம் செய்து வைத்த மனைவி - வியப்பில் நெட்டிசன்கள்.!

மொட்டை மாடியில் கோபுரம் போல வாட்டர் டேங்க் வைத்திருப்பவர்கள் அதன் மீது ஏறி தொட்டியை சுத்தம் செய்ய பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகையோருக்கு இந்த மடக்கு படிக்கட்டு உதவிகரமாக இருக்கும். இந்தியாவில் இதற்கு முன்பு ஒருவர் இதேபோல மடக்கு படிக்கட்டுகளை உபயோகித்து வந்தார்.மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா அதுகுறித்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.
Published by:Selvi M
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி