ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ரூ.26க்கு வகைவகையாக சாப்பாடு.. பில்லைப் பார்த்து பெருமூச்சுவிடும் இளைய தலைமுறை!

ரூ.26க்கு வகைவகையாக சாப்பாடு.. பில்லைப் பார்த்து பெருமூச்சுவிடும் இளைய தலைமுறை!

உணவக பில்

உணவக பில்

டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் அமைந்துள்ள Lazeez உணவகம் & ஹோட்டலின், டிசம்பர் 20, 1985 தேதியிட்ட பில் அது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  மாதம் ஒரு முறை ஒரு நல்ல பெரிய ஹோட்டலுக்குச் சென்று வேண்டியதை வாங்கி சாப்பிட வேண்டும் என்பது எல்லோரது   ஆசையாக இருக்கிறது. பட்ஜெட் போட்டு வாழும் குடும்பங்கள் இதற்காக கொஞ்சம் சேர்த்து வைத்து போவார்கள். காரணம் நல்ல பெரிய ஹோட்டல் என்று போனால் 1 நேரம் நன்றாக சாப்பிட 1000 முதல் 2000 வரை சாதாரணமாகவே பில் வந்துவிடும்.

  இந்நிலையில் 37 வருடங்களுக்கு முன்பு 1985 இல் ஒருவர் சாப்பிட்ட ஹோட்டல் பில் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு காரணம் அதன் விலை தான். ஆகஸ்ட் 12, 2013 அன்று பேஸ்புக்கில் முதலில் பகிரப்பட்ட இந்த பதிவு தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.

  டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் அமைந்துள்ள Lazeez உணவகம் & ஹோட்டலின், டிசம்பர் 20, 1985 தேதியிட்ட பில் அது. பில்லின் படி, வாடிக்கையாளர் ஒருவர் ஷாஹி பனீர், தால் மக்னி, ரைதா மற்றும் சில சப்பாத்திகளை ஆர்டர் செய்திருந்தார்.

  ஷாஹி பனீர், தால் மக்னி ஆகிய இரண்டு உணவுகளும் தலா ₹ 8 ஆகவும் , ரைத்தா ₹ 5 சப்பாத்தி ₹ 6 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பில்லின் மொத்தத் தொகை - ₹ 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  இது அன்றைய காலகட்டத்தில் மிக அதிக விலையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது ஒரு பாக்கெட் சிப்ஸ்பாக்கெட்டில் விலைக்கு சமம் என்று நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். 37 ஆண்டுகளில் விலை எட்டாம் எந்த விகிதத்தில் இருந்துள்ளது என்று நினைத்து மறுகிக் கொண்டு இருக்கின்றனர்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Delhi