ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அக்ரிமெண்ட் போட்டு திருமணம் செய்த தம்பதிக்கு பிரபல நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!

அக்ரிமெண்ட் போட்டு திருமணம் செய்த தம்பதிக்கு பிரபல நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!

பீட்சா ஹட்

பீட்சா ஹட்

Pizza | அஸ்ஸாமை சேர்ந்த புதுமண தம்பதிக்கு பிரபல பீட்சா ஃபுட் ஜெயின் மாதம் ஒரு பீட்சாவை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதற்கான சுவாரஸ்யமான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India

இந்தியாவைப் பொறுத்தவரை அவரவர் மத நம்பிக்கைகள், வழிபாட்டுத் தலங்களில் மணப்பெண் மற்றும் மணமகனுக்கு பிடித்த வகையில் திருமணம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் இந்தியாவில் பொறுத்தவரை திருமணத்திற்கு ஒப்பந்தம் போடும் பழக்கம் கிடையாது. மனம் ஒத்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே திருமணம் ஆயிரங்காலத்து பயிராக நீடிக்கும் என பெரியோர்கள் நம்புகின்றனர். உண்மையில் கல்யாணத்திற்கு முன்போ அல்லது காதலிக்கும் போதோ எதையும் வெளிப்படையாக பேசாமல், தேவைகளை அறியாமல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் குறுகிய காலத்திலேயே விவகாரத்து பெறும் சூழ்நிலை உருவாகிறது.

திருமண ஒப்பந்தம்:

அஸ்ஸாமைச் சேர்ந்த மின்டு ராய், சாந்தி பிரசாத்தை ஜூன் 2022 இல் திருமணம் செய்து கொண்டார். திருமண மேடையில் சாந்தி பிரகாசத் திருமண வாழ்க்கையில் தனது வாழ்க்கை துணை எப்படியெல்லாம் இருக்க வேண்டும், தனக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார், அதேபோல் தனக்கான நிபந்தனை பேப்பரில் மின்டு ராய்யும் கையொப்பம் பெற்றுக்கொண்டார். இது இணையத்தில் தாறுமாறு வைரலானது.

இதில் கணவனுக்கான ஒப்பந்தத்தில் மாதம் ஒரு பீட்சா வாங்கித் தர வேண்டும் என மனைவி நிபந்தனை விதித்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரபல பீட்சா நிறுவனம், புதுமண தம்பதிக்கு மாதம் ஒரு பீட்சாவை தாங்கள் ப்ரீயாக டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Pizza Hut India (@pizzahut_india)மாதம் ஒரு பீட்சா இலவசம்:

பிரபல பீட்சா நிறுவனமான பீட்சா ஹட், கர்வா சௌத் நன்னாளை முன்னிட்டு, ஒரு வருடத்திற்கு மாதம் ஒரு பீட்சாவை தங்களது கிளைகளில் இருந்து இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என மின்டு ராய், சாந்தி பிரசாத் தம்பதிக்கு ஆஃபர் கொடுத்துள்ளது.

Also Read : கேன்சரால் பாதிக்கப்பட்ட தங்கையை நெகிழ வைத்த அண்ணன்! கலங்க வைக்கும் வீடியோ!

அஸ்ஸாம் தம்பதியின் வீடியோவை ஷேர் செய்துள்ள பீட்சா ஹட் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உங்கள் கணவருடன் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு மாதத்திற்கு ஒரு பீட்சா!! அதற்காகவே நாங்கள் வாழ்கிறோம். பீட்சாவை விரும்பும் அனைத்து மகிழ்ச்சியான ஜோடிகளுக்கும் #HappyKarvaChauth" என பதிவிட்டுள்ளது.

சுமங்கலி பெண்கள் தனது கணவன் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்பதற்காக வடமாநிலங்களில் கர்வா செளத் பண்டிகையை கொண்டாடுகின்றனர். எனவே கூடுதல் சென்டிமென்ட்டாக இந்த தினத்தை பீட்சா நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக பீட்சா ஹட் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் புதுமண தம்பதி அருகேயுள்ள பீட்சா ஹட் கடைக்குச் செல்வதும், அங்கு அவர்கள் தங்களுக்கு பிடித்தமான பீட்சாவை ஆர்டர் செய்து ரசித்து, ருசித்து சாப்பிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தற்போது அஸ்ஸாம் ஜோடியின் திருமண ஒப்பந்தத்தை விட பீட்சா ஹட் நிறுவனத்தின் புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் தந்திரம் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending