பொறுப்புள்ள 'குடிமகள்' - பிறந்த நாளுக்கு கேக் அனுப்பிய மும்பை காவல்துறை!

பொறுப்புள்ள 'குடிமகள்' - பிறந்த நாளுக்கு கேக் அனுப்பிய மும்பை காவல்துறை!

மும்பை போலீஸ்

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நண்பர்கள் அழைத்தும் வெளியே செல்லாத பெண் ஒருவருக்கு பொறுப்புள்ள குடிமகன் என்ற பிறந்தநாள் வாழ்த்துடன் கேக் ஒன்றை பரிசாக மும்பை காவல்துறை அனுப்பி வைத்துள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருப்பது குறித்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.  கொரோனா 2வது அலை  நாடு முழுவதும் ருத்ரதாண்டவத்தை அரங்கேற்றி வருகிறது.

அதனால், பொதுமக்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அது தங்கள் உயிரைக் காப்பது மட்டுமின்றி சார்ந்தோரின் உயிரையும் பாதுகாக்கும் என முன்களப் பணியாளர்கள் கூறி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்களையும் காவல்துறையினர் அங்கீகரித்து பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/MumbaiPolice/status/1385289306424610816?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1385289306424610816%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-8275472263722039186.ampproject.net%2F2104081613001%2Fframe.html

அந்தவகையில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா குறித்து மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தை அங்கீகரித்து, அவருக்கு பிறந்தநாள் பரிசாக கேக் ஒன்றையும் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். சமிதா பாட்டீல் என்ற பெண் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், வீட்டை விட்டு வெளியே செல்லாத அவர், பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் தவிர்த்துள்ளார்.

ஆனால், பிறந்தநாளன்று அவரை தொடர்பு கொண்ட நண்பர்கள், குறிப்பிட்ட இடத்தைக் கூறி அங்கு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வது குறித்து விவாதித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த சமீதா, கொரோனா காலத்தில் நண்பர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும், அதுவே தான் அவர்களுக்கு கொடுக்கும் பிறந்தநாள் பரிசு எனவும் கூறியுள்ளார். மேலும், கொரோனா காலத்தில் நண்பர்களின் உடல்நலனில் அக்கறை கொள்பவரே உண்மையான நண்பனாக இருக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

https://twitter.com/66TROY66/status/1385292127819599876?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1385292127819599876%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-8275472263722039186.ampproject.net%2F2104081613001%2Fframe.html

ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் சமீதா பாட்டில், கொரோனா தொடர்பான விவாதத்தில் தன்னுடைய நிலைப்பாடு மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிய மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்தார். அதில், மும்பை காவல்துறையையும் டேக் செய்திருந்தார். இதனைப் பார்த்த மும்பை காவல்துறை, சமீதா பாட்டீலின் நல்ல எண்ணத்துக்கு பாராட்டு தெரிவித்ததுடன் தனிப்பட்ட மெசேஜில் வீட்டு முகவரியையும் கேட்டுப் பெற்றது. இதனையடுத்து, சமீதா பாட்டீலின் வீட்டுக்கு 'பொறுப்புள்ள குடிமகன்' என்ற வாழ்த்துச் செய்தியுடன் கேக் ஒன்றையும் சர்பிரைஸாக அனுப்பி வைத்துள்ளது.

காவல்துறையின் இந்த சர்பிரைஸ் சமீதா பாட்டீலை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரும் மும்பை காவல்துறையினர் இந்த நடவடிக்கைக்கு வாழ்த்தும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், நாட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் நாள்தோறும் பதிவாகும் மாநிலங்களில் மகாராஷ்ரா முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கட்டுபாடுகள், இரவு நேர ஊரடங்குகள் விதிக்கப்பட்டுள்ளன.

 
Published by:Ramprasath H
First published: