ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

'சிறுவனின் திறமைக்கு மரியாதை' ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்ட கியூட் வீடியோ

'சிறுவனின் திறமைக்கு மரியாதை' ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்ட கியூட் வீடியோ

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Viral Video:சிறுவன் ஒருவன் ஸ்னூக்கர் விளையாட்டை விளையாடுவதற்கு தேவையான டூல் கிட் ஏதும் இன்றி தனது மன வலிமை ஒன்றை மட்டுமே மையமாக வைத்து தானே உருவாக்கிய செங்கற்களை கொண்டு விளையாடி அசத்தும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிறுவனின் விளையாட்டு திறமை குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

’வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற’ என்பது திருக்குறள். இதன் பொருள் ஒரு செயலை செய்ய பல குணங்கள் அவசியம். உதாரணமாக அச்செயலை செய்ய தேவையான பொருட்கள், ஆராய்ச்சி, மக்கள், குழு, திட்டம், ஒருங்கிணைப்பு, செல்வம், நேரம் என்று பலவற்றை சொல்லலாம். ஆனால் இவை மட்டும் போதாது. இவற்றிளுளெல்லாம் முதன்மையாக தேவைப்படுவது அச்செயலின் கண் கொள்ளும் மன உறுதியே ஆகும். மனவுறுதி என்னும் விசை இருந்தால் தான் மற்ற எல்லாவற்றையும் இயக்க முடியும். மனவுறுதி இல்லையென்றால் மற்ற எல்லாவற்றையும்  அரை மனதாகவே செய்வோம். அது செயலை முழுமையாக செய்யவிடாது.

அது மட்டும் இன்றி நல்ல குழு நல்ல பொருட்கள் நல்ல ஆராய்ச்சி நல்ல திட்டம் இருக்கிறது என்று கர்வம் கொண்டு இருந்து செயலை செய்யும் மனவுறுதி இல்லை என்றால் பின்னால் ஏதாவது இடர் வந்தால் அதனை எதிர்நீச்சலிட்டு கடந்து செயலை செய்து முடிக்க முடியாமல் போகும்.

மனவுறுதி இருந்து மற்ற தேவையானவற்றில் சிறிது குறைந்தாலும் சமாளித்துவிடலாம். ஆனால் மற்ற எல்லாம் இருந்தும் மனவுறுதி இல்லை என்றால் நம்மால் அச்செயலை முழுமையாக செய்யவே முடியாது. மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே. பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகாது என்பதாகும். இந்த திருக்குறளின் பொருளுக்கு ஏற்ப சிறுவன் ஒருவன் செய்த செயல் தற்போது இணையத்தை அசத்தி வருகின்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு டேக் செய்துள்ளார். அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் ஸ்னூக்கர் என்னும் மேடைக் கோற்பந்தாட்டம் விளையாட்டை விளையாடுகிறான். விளையாட்டை சிறுவன் விளையாடுவது தன்னிடம் ஏதுமற்ற நிலையிலும் மன வலிமை மற்றும் திறமையை கொண்டு விளையாடுகிறான். செங்கற்களை அடுக்கி வைத்து அதனுள் 6 பந்துகளை போட்டு கையில் கிடைத்த குச்சியை கொண்டு விளையாட்டைத் தொடங்குகின்றான்.

செங்கல்லினை கொண்டு அடுக்கப்பட்டுள்ள நான்கு துளைகளிலும் ஓட்டைகளை இட்டு அதனுள் பந்துகள் விழும்படி தன் மனக்கணக்கை வைத்து சிறுவன் விளையாடும் திறமையை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை தனது இணையதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறுவனின் திறமைக்கு எனது மரியாதை என தலைப்பிட்டுள்ளார். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பன போல் திறமைக்கு செல்லும் இடமெல்லாம் பெருமை என்பதை இந்த வீடியோ நன்கு உணர்த்துகின்றது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Annamalai, BJP, Trending, Viral Video