இன்றைய நவீன காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு காரணம் விஞ்ஞானிகள் தான். மருத்துவம், தொழில்துறை, அறிவியல், மற்றும் விண்வெளி ஆய்வு சார்ந்த கருவிகள் உள்ளிட்ட விஷயங்களில் பல அதிசயங்களில் நிகழ்த்தி காட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு அற்புதத்தை செய்து கட்டியதன் மூலம் ஆராய்ச்சியாளர்களை நவீன ரசவாதிகள் என்று கூட அழைக்கலாம். ஏனெனில் அந்தளவுக்கு ஒரு மாயாஜால சோதனையை இவர்கள் நடத்தியுள்ளனர்.
அதாவது அறிவியல் ரீதியாக அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் தொடர்பு மூலம் தண்ணீரில் இருந்து தங்கத்தை உருவாக்கும் ஒரு வித்தியாசமான ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். செக் குடியரசின் தலைநகரமான ப்ராக்கில் செக் அகாடமி ஆஃப் சயின்சஸின் ஆராய்ச்சியாளர்கள் நாட்டுப்புறவியலில் உள்ள ரசவாதிகளால் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைச் செய்துள்ளனர். ஒரு நீர்த்துளியை பளபளப்பான, தங்க உலோகக் குமிழியாக இவர்கள் மாற்றியுள்ளனர். இந்த அதிசயம் ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடித்தது. ஆனால் இது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக இருந்தது.
Also Read: சென்னையில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா... இந்த இடங்களில் கடைகள் மூடல்..
ஆராய்ச்சி கோட்பாட்டின்படி, பெரும்பாலான பொருட்கள் மிக அதிக அழுத்தத்தின் கீழ் உலோகமாக மாறும். அப்போது அணுக்கள் மிகவும் இறுக்கமாக நிரம்பியிருந்தால், அவை அவற்றின் வெளிப்புற எலக்ட்ரான்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகின்றன. இதனால் ஒரு குறிப்பிட்ட பொருள் தாமிரம் அல்லது இரும்பு போன்ற மின்சாரம் கடத்தியாக மாறுகிறது. இருப்பினும், இத்தகைய உயர் அழுத்தம் ஆய்வக சோதனையில் சாத்தியம் என்பதை சிந்தித்து கூட பார்க்க முடியாதது.
யுரேனஸ் அல்லது நெப்டியூன் போன்ற பெரிய கிரகங்கள் ஒரு உலோக நிலையில் நீரை வைத்திருக்கின்றன. மேலும் அவை மிகப்பெரிய வளிமண்டல அழுத்தத்தைக் கொண்டுள்ளன. மிக அதிக அழுத்தம் உலோக ஹைட்ரஜனை ஒரு சூப்பர் கண்டக்டராக மாற்றும். அதாவது, பூஜ்ஜிய எதிர்ப்புடன் மின்சாரத்தை கடத்த முடியும் என்று புவி இயற்பியலாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய உயர் அழுத்தமானது சுமார் 15 மில்லியன் வளிமண்டல அழுத்தத்தைக் கொண்டிருக்கும்.
If you can’t turn water into gold like a good alchemist would, this might be the next best thing. https://t.co/eGOJa2gKbI
— nature (@Nature) July 30, 2021
கண்டுபிடிப்பு எப்படி சாத்தியமானது?
செக் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு ஆராய்ச்சியாளர்கள், பிராகில் இயற்பியல் வேதியியலாளர் பாவெல் ஜங்விர்த் என்பவர் நடத்திய இணை ஆய்வை சாத்தியமாக்க ஒரு மாற்று வழியைக் கண்டறிந்தனர். அதாவது ஒரு பொருள் அத்தகைய உயர் அழுத்தத்தை சார்ந்து இருப்பதை விட, அவை குறிப்பிட்ட கால உறுப்புகளின் குழு 1 இல் உள்ள கார உலோகங்களை அதாவது சோடியம் மற்றும் பொட்டாசியத்தை ஏன் நாட கூடாது என்று யோசித்தனர். ஏனெனில் இந்த உலோகங்கள் அவற்றின் வெளிப்புற எலக்ட்ரானை பகிர்ந்து கொள்கின்றன.
Also Read: பாஜக எம்.எல்.ஏவை தெருவில் தேங்கியிருக்கும் கழிவு நீரில் நடக்க வைத்த தொகுதி மக்கள்!
ஆகையால், அழுத்தத்திற்கு பதிலாக தண்ணீருடன் எலக்ட்ரானுடன் டூப் செய்யப்பட்டால், அந்த கார உலோகம் தண்ணீர் கரைசலில் இருந்தாலும் சில வினாடிகள் அதே முடிவைக் கொடுக்கும். ஆனால் பரிசோதனையில் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த யோசனை ஒரு தடையாக இருந்தது. ஏனெனில் கார உலோகங்கள் தண்ணீருடன் வெடித்து வினைபுரிகின்றன. இதை எதிர்கொள்ள, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கையுடன் எதிர்வினையை மெதுவாக்கவும் மற்றும் வெடிக்காத நிலையை அடைய வைக்கவும் வேண்டும். இதற்காக, இந்த உலோகங்கள் அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கார உலோகங்களையும் ஒரு சிரிஞ்சை கொண்டு நிரப்பி, அதை ஒரு வெற்றிட அறையில் வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன் பிறகு, அவர்கள் சிரிஞ்சுடன் ஒரு துளியை உருவாக்கினர். பின்னர் அது ஒரு சிறிய அளவு நீராவிக்கு வெளிப்பட்டது. நீர்த்துளியில் நீர் ஒடுங்கியவுடன், எலக்ட்ரான், நேர்மறை உலோக அயனிகளுடன் சேர்ந்து, நீரில் பரவி, அதை தங்க அடுக்காக மாற்றியது. இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து நேச்சர் இதழுடன் பேசிய ஆராய்ச்சியாளர் ஜங்விர்த், "இது ஒரு புதிய உறுப்பைக் கண்டுபிடிப்பது போல் ஆச்சரியமாக இருந்தது. இது எனது நாள் வேலைக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் விஷயமாக பார்க்கிறேன். மேலும் இந்த கண்டுபிடிப்பின் மூலம் அறிவியல் வேடிக்கையாக இருக்க முடியும் என்பதை எனக்கு நினைவூட்டியது." என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.