Home /News /trend /

12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை உயிரினம்... ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை உயிரினம்... ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

'நாய் கரடி

'நாய் கரடி

ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாய் கரடி என்பது தனது இறைக்காக ஒரு மிருகத்தின் மீது பலமுனை தாக்குதலை தொடுக்கும் திறன் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பைரனீஸ் மலைப் பகுதியில் ‘நாய் கரடி’ என்னும் புதிய வகை உயிரினத்தின் படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். தற்போது பிரான்ஸ் என்று அறியப்படும் இந்த நிலப்பகுதியில் இந்த வேட்டை விலங்கு சுமார் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    நாய் மற்றும் கரடி ஆகிய இரண்டு விலங்கின் கூறுகள், தோற்றம் உள்ளிட்டவை கலந்து இருப்பதால் இது நாய் கரடி என்று அழைக்கப்படுகிறது. கரடியைப் போன்றே கொழுத்த உடம்பு, தட்டையான பாதங்கள் மற்றும் நாடைப் போல நீண்ட கால்கள் மற்றும் நீண்ட முக அமைப்பு ஆகியவற்றை கொண்டதாக இது இருந்திருக்கிறது. இந்த மிருகத்தின் கீழ் தாடைப் பகுதி எலும்புகள் படிமங்களாக கிடைத்துள்ளன. இந்த கீழ் தாடை பற்களானது, எலும்புகளுடன் கூடிய இறைச்சியை கடித்து சாப்பிடுவதற்கு உதவியாக அந்த பற்கள் இருந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    உலகெங்கிலும் இந்த நாய்கள் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆய்வின் படி நாய் கரடி மிருகங்கள் என்பது ஆசியா, தென் ஆப்ரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஆகிய இடங்களில் இந்த வேட்டை மிருகம் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த ஆய்வறிக்கையை பியர்ஜ் என்னும் இதழ் வெளியிட்டுள்ளது.

    நீங்கள் நிற்கும் ஸ்டைல் மூலம் உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.!

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பசேல் இயற்கை வரலாற்று மியூசியத்தின் சார்பில் பாஸ்டியன் மென்னகார்ட் என்னும் ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

    வரலாற்று காலத்திற்கு முந்தைய காலத்தின் தொடர்புடைய மிருகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 8 இன்ச் அளவிலான படிமங்கள் கண்டறியப்பட்டன. புதிதாக கண்டறியப்பட்ட இந்த புதிய மிருகத்துக்கு நாய் கரடி என்ற பெயரை ஃபுளோரல் சோல் என்னும் ஆராய்ச்சியாளர் சூட்டினார். இந்த ஆய்வுக் கட்டுரையை தயாரித்த துணை எழுத்தாளர்களில் அவரும் ஒருவராவார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் ஆய்வில் கண்டறியப்பட்ட மிருகத்தின் பிரதான அம்சமே அதன் பற்கள் தான். இதில் இடம்பெற்றுள்ள 4ஆவது லோயர் ப்ரீமோலார் என்னும் பகுதியான இதற்கு முந்தைய உயிரினங்களில் காணப்படாத பகுதியாக இருக்கிறது. ஆகவே தான், இது உயிரின வகை என்று முடிவு செய்தோம்’’ என்று கூறினார்.

    பலமுனை தாக்குதலில் ஈடுபடும்

    ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாய் கரடி என்பது தனது இறைக்காக ஒரு மிருகத்தின் மீது பலமுனை தாக்குதலை தொடுக்கும் திறன் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிருக குடும்ப வகையில் இருந்து வேறு மிருகங்கள் தோன்றி வாழ்ந்தனவா என்பது குறித்த ஆய்வுக்கும் இது அடிப்படையாக அமைந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும், ஐரோப்பாவைக் கடந்து பெரும் நிலப் பரப்புகளில் நாய் கரடி உலா வந்ததற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி