Home /News /trend /

ஸ்கூட்டருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்க ரூ.15 லட்சம் செலவு செய்த நபர்! யாருசாமி நீ என வியப்பில் ஆழ்த்தும் சம்பவம்...

ஸ்கூட்டருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்க ரூ.15 லட்சம் செலவு செய்த நபர்! யாருசாமி நீ என வியப்பில் ஆழ்த்தும் சம்பவம்...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Fancy Number For Scooter | நாம் பயன்படுத்தும் செல்ஃபோன் நம்பர் ஆகட்டும் அல்லது வாகனங்களின் பதிவு எண் ஆகட்டும், அந்த எண்கள் நல்ல கவர்ச்சிகரமாக, எல்லோர் மனதிலும் எளிதில் பதியக் கூடிய விதமாக ஃபேன்ஸி நம்பர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.

மேலும் படிக்கவும் ...
    நாம் பயன்படுத்தும் செல்ஃபோன் நம்பர் ஆகட்டும் அல்லது வாகனங்களின் பதிவு எண் ஆகட்டும், அந்த எண்கள் நல்ல கவர்ச்சிகரமாக, எல்லோர் மனதிலும் எளிதில் பதியக் கூடிய விதமாக ஃபேன்ஸி நம்பர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். குறைந்தபட்சம் நமது பிறந்த தேதி அல்லது ஆண்டு, திருமண தேதி, பிள்ளைகளின் பிறந்த தேதி போன்றவற்றுடன் ஒத்துப்போகும் எண்களை வாங்குவது நமது விருப்பமாக இருக்கும். ஃபேன்ஸி நம்பர்களை வாங்குவதற்காக சில ஆயிரம் ரூபாய்களை நாம் செலவு செய்வோம்.

    அதே சமயம், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் பயன்படுத்துபவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்றோரும் ஃபேன்ஸியான நம்பர்களை தங்கள் வாகனங்களுக்கு பயன்படுத்துவார்கள். ஃபேன்ஸி நம்பர் வேண்டும் என்று என்னதான் ஆசை இருந்தாலும், அதற்காக செலவிடும் தொகை ஒரு வரம்பு மீறிச் செல்வதை நாம் ஏற்க மாட்டோம்.

    ஆனால், சண்டீகர் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ரூ.71,000 மதிப்பில் வாங்கப்பட்ட தனது ஸ்கூட்டருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்குவதற்காக ரூ.15.44 லட்சம் செலவு செய்திருக்கிறார். CH01 - CJ - 0001 என்ற இந்த எண்-ஐ இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார் அவர். ஃபேன்ஸி நம்பரை ஏலத்தில் எடுத்த நபரின் பெயர் பிரிஜ் மோகன் ஆகும். அவர் இதே எண்-ஐ தனது காருக்கு பயன்படுத்த இருப்பதாகக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து மோகன் கூறுகையில், “நான் சமீபத்தில் வாங்கிய ஆக்டிவா ஸ்கூட்டருக்கு இந்த பதிவு எண்-ஐ பயன்படுத்தப் போகிறேன். அதற்குப் பிறகு இதே நம்பரை எனது காருக்குப் பயன்படுத்திக் கொள்வேன்’’ என்று தெரிவித்தார்.

    378 நம்பர்கள் ஏலம்

    சண்டீகர் மாநில வாகனப் பதிவு மற்றும் லைசென்ஸ் ஆணையத்தின் சார்பில் கடந்த 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையில் ஃபேன்ஸி நம்பர்களுக்கு ஏலம் விடப்பட்டது. குறிப்பாக, CH01 - CJ என்ற சீரியஸ் கொண்ட 378 ஃபேன்ஸி நம்பர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன. ஏலத்தில் கலந்து கொண்ட வாகன உரிமையாளர்கள் பலர், ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, தங்களுக்கு பிடித்தமான பதிவு எண்களை ஏலம் எடுத்தனர்.

    Read More : சிங்கத்திடம் இரையை பங்கு கேட்ட குட்டி கழுதைப்புலி! சிங்கம் செய்த செயல்...வைரல் வீடியோ


    ரூ.1.5 கோடி வருவாய்

    ஃபேன்ஸியான வாகன பதிவு எண்களை ஏலம் விட்டதன் மூலமாக, சண்டீகர் மாநில அரசுக்கு மொத்தம் ரூ.1.5 கோடி வருவாய் கிடைத்தது. குறிப்பாக, ரூ.15.44 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட CH01 - CJ - 0001 நம்பருக்கு அடுத்தபடியாக CH01 - CJ - 0002 என்ற எண் ரூ.5.4 லட்சத்திற்கு வாங்கப்பட்டது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Viral

    அடுத்த செய்தி