டிராகன் போன்ற பறக்கும் உயிரினத்தின் புதைப்படிவம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!

டிராகன்

உயிரினத்தின் எலும்பு அடர்த்தி பற்றி பேசுகையில், இந்த ஊர்வனவற்றின் எலும்புகளின் மெல்லிய சுவர் மற்றும் வெற்று இடங்கள் என புதைபடிவங்கள் இன்னும் அப்படியே இருப்பதைக் கண்டு டிம் ஆச்சரியமடைந்தார்.

  • Share this:
பார்ப்பதற்கு டிராகன் போன்ற முக வடிவத்தை கொண்ட ஒரு பறக்கும் உயிரினத்தின் புதைப்படிவத்தை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இயற்கையின் படைப்பில் இவை மிகவும் அற்புதமான உயிரினங்களில் ஒன்று என அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பழங்கால ஆய்வாளரும் ஆய்வின் மூத்த ஆசிரியருமான டிம் ரிச்சர்ட்ஸ், அந்த உயிரினத்தின் தாடையின் புதைபடிவத்தை ஆராய்ந்து இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பறக்கும் ஊர்வன என்று முடிவு செய்தார். தபுங்காகா ஷாவி என்று பெயரிடப்பட்ட அந்த ஸ்டெரோசோர்ஸ், ஈட்டி போன்ற வாய் மற்றும் 23 அடி நீண்ட இறக்கைகள் கொண்ட பறக்கும் ஊர்வன என்றும் இவை சுமார் 105 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் வானில் உலா வந்ததாக நம்பப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இந்த புதைப்படிவத்தின் மூலம், அந்த உயிரினத்திற்கு 3 அடி நீளமுள்ள மண்டை ஓடும், அதன் நீண்ட கழுத்து ஒரு ஜோடி நீண்ட இறக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் டிம் கண்டறிந்துள்ளார். நீண்டகாலமாக ஆஸ்திரேலியாவின் ஈரோமாங்கா கடலில் வாழ்ந்த பல மீன் இனங்களை வேட்டையாடி வந்த இந்த உயிரினத்திற்கு சுமார் 40 பற்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "ஸ்டெரோசோர்ஸ் ஒரு வெற்றிகரமான மற்றும் மாறுபட்ட ஊர்வன குழுவாகும். அதிலும் குறிப்பாக இவை பறக்கும் திறன் கொண்ட முதல் முதுகெலும்பு விலங்குகள்," என்று அவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.இந்த ஊர்வன விலங்கு மிகவும் காட்டுமிராண்டித்தனமானவையாக இருந்திருக்கலாம் என்று கூறிய டிம், இது ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது வகை அனாங்குவேரியன் ஸ்டெரோசோர் என்று கூறினார். மேலும் இந்த மூன்று உயிரினங்களும் மேற்கு குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவை.

Also read... சென்னை ஸீஷெல் அருங்காட்சியகத்தில் டைனோசர் பிரிவில் 14 இயந்திர மாதிரிகள் சேர்ப்பு!

உயிரினத்தின் எலும்பு அடர்த்தி பற்றி பேசுகையில், இந்த ஊர்வனவற்றின் எலும்புகளின் மெல்லிய சுவர் மற்றும் வெற்று இடங்கள் என புதைபடிவங்கள் இன்னும் அப்படியே இருப்பதைக் கண்டு டிம் ஆச்சரியமடைந்தார். மேலும் அவற்றை எந்த சேதமும் இல்லாமல் பாதுகாப்பது மிகவும் கடினம் என்று அவர் கூறினார்.

தபுங்காகா ஷாவியின் புதைபடிவத்தின் கண்டுபிடிப்பு ஸ்டெரோசோர் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் உயிரினங்களின் பதிவு குறிப்பாக மோசமாக உள்ளது என்பதையும் பழங்கால நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

டிம்ஸின் பிஎச்டி மேற்பார்வையாளரும் மற்றும் அவரது இணை எழுத்தாளருமான ஸ்டீவ் சாலிஸ்பரி என்பவர் இந்த ஸ்டெரோசரின் கண்டுபிடிப்பு அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது, அன்ஹங்குவேரியன் குடும்பத்தின் புதிய இனங்கள் பற்றி நான் மிகவும் சுவாரஸ்யமாகக் கண்டது அதன் கீழ் தாடையின் எலும்பு மார்பின் அளவுக்கு பெரிதாகவும் நீளமாகவும் இருந்தது தான் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு வடமேற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ரிச்மண்ட் அருகே உள்ள வனமாரா நாட்டில் நடத்தப்பட்டது.
Published by:Vinothini Aandisamy
First published: