ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #ReleasePerarivalan

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #ReleasePerarivalan
  • Share this:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி, சமூக வலைதளங்களில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இதுவரை ஆளுநர் முடிவெடுக்கவில்லை. இந்த நிலையில், விடுதலை கிடைக்காமல் சிறையில் வாடும் பேரறிவாளனின் விடுதலைக்கு உங்கள் குரலை உரத்து எழுப்புங்கள் என்ற வாசகங்கள் கொண்ட படத்துடன் #ReleasePerarivalan என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

ராஜீவ் காந்தி வழக்கு விசாரணையில், சிபிஐ அதிகாரியாய் இருந்த தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் தவறாக பதிவு செய்து சமர்ப்பித்துவிட்டதாக வழக்கறிஞர்களிடம் தெரிவித்தார் . வாக்குமூலத்தை முழுமையான அசல் வாக்கியங்களாக பதிவு செய்யாமல், சற்றே மொழி மயக்கம் ஏற்படும்படியாக பதிவு செய்ததில், பேரறிவாளனின் வழக்கு வேறு திசையில் பயணித்துவிட்டது என்றும் பணி ஓய்வு பெற்றபின் பின்னாளில் மன உறுத்தல் ஏற்பட்டு செய்த தவறுக்கு பரிகாரம் தேட விரும்புவதாகவும் இந்தியா டுடேவிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Also see...
First published: February 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading