ஊரடங்கால் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தவருக்கு பள்ளி நண்பர்கள் கொடுத்த தீபாவளி பரிசு -புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்

கான்கிரீட் வீட்டின் புகைப்படம். (மாதிரி படத்திற்காக‌ மட்டுமே பயன்படுத்தப்படும் படம்)

நாகேந்திரன், இந்த காரியத்தை செய்வதற்குப் பின்னால் இருந்த காரணத்தை விளக்கும் போது, நண்பர்கள் கூட அவரின் தொடர்பில் இல்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது, உண்மையான தோழமை எப்போதும், எதையும் எதிர்பார்க்காது. பள்ளி நண்பர்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது, மேலும் ஊரடங்கின் போது தனது நண்பரை மிகவும் துன்பத்தில் பார்த்தபின் அவருக்கு எதையாவது செய்தாகவேண்டும் என்று தீர்மானம் செய்து இந்த உதவியை செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பள்ளியில் நண்பர்களிடம் நாம் கொண்ட பிணைப்பு அது என்றென்றும் பசுமை கலந்த நினைவுகளுடன் இருக்கும். அதிலும் மிகக் குறைந்த நெருக்கமான நண்பர்களுடன் அந்த பிணைப்பு இன்னும் அதிகம். உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் சிறந்த நண்பர்களை நீங்கள் பள்ளி வாழ்க்கையில் உருவாக்குகிறீர்கள். தமிழ்நாட்டில் புதுக்கோட்டையிலிருந்து வந்த ஒரு அழகான நட்பின் கதை, தோழமையை மேலும் வலுப்படுத்துகிறது, பள்ளி நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. 

நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட ஊரடங்கு பலரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. இந்த சூழலில் 44 வயதான லாரி டிரைவர் முத்துகுமார், கடுமையான நிதி சிக்கல்களைச் சந்தித்துள்ளார். அவர் மாதந்தோறும் ரூ. 15,000 சம்பாதிப்பாதித்து வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக மாதம் வெறும் 2,000 ரூபாய் தான் சம்பாதிக்க முடிந்தது. இதனால் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் கடுமையான நிதி பிரச்சினைகள் ஏற்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை தாக்கிய கஜா புயல், முத்துகுமாரின் வீட்டையும் ஒரு கை பார்த்தது. இதனால் குடும்பத்திற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் குடும்பம் நடத்த போதுமான இடம் இருந்தும் வீடு இல்லாமல் தவித்துவந்தார். முத்துகுமாரின் பள்ளி நண்பர் K. நாகேந்திரன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பள்ளியில் நடந்த சந்திப்பில் (school reunion) அவர்களது பள்ளி ஆசிரியர் இல்லத்தில் அவரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது, 

அதன் பின்னர் நாகேந்திரனை அவரது வீட்டிற்கு அழைத்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்டபோது, நாகேந்திரன் அதிர்ச்சியடைந்தார், தனது பள்ளி நண்பரின் வீடு இவ்வளவு மோசமான நிலையில் பார்த்ததைக் கண்டு மனம் உடைந்தார் நாகேந்திரன். வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் புயலால் அழிக்கப்பட்டு, வீட்டுக் கூரை பலத்த சேதம் அடைந்ததால், அந்த இடம் மோசமானதாக இருந்தது. தனது நண்பர் அனுபவிக்கும் இந்த  வேதனையிலிருந்து அவரை விடுவிக்க ஏதாவது செய்ய முடிவு செய்தார். 

Also read... பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய சிறந்த ஏர் பியூரிஃபையர் கார்களின் பட்டியல்நாகேந்திரன் நண்பரின் நிலையை சமூக ஊடங்கங்களில் பதிவு  செய்தார். மேலும் ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி பள்ளி நண்பர்கள் பலரையும் சேர்த்துக் கொண்டார், மேலும் மற்றவர்களின் உதவி இந்த நல்ல காரியத்திற்கு தேவைப்படும் என்று அவர்களிடம் கூறினார். முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வெறும் 3 மாதங்களில் புதிய வீடு கட்ட நண்பர்கள் மொத்தம் 1.5 லட்சம் ரூபாயை அளித்தனர். மேலும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து தீபாவளி பரிசாக ஒரு வீட்டை முத்துகுமாருக்கு பரிசளித்தனர்.

நாகேந்திரன், இந்த காரியத்தை செய்வதற்குப் பின்னால் இருந்த காரணத்தை விளக்கும் போது, நண்பர்கள் கூட அவரின் தொடர்பில் இல்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது, உண்மையான தோழமை எப்போதும், எதையும் எதிர்பார்க்காது. பள்ளி நண்பர்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது, மேலும் ஊரடங்கின் போது தனது நண்பரை மிகவும் துன்பத்தில் பார்த்தபின் அவருக்கு எதையாவது செய்தாகவேண்டும் என்று தீர்மானம் செய்து இந்த உதவியை செய்துள்ளார். நாம் துன்பங்களைக் கண்டு ஒதுங்கிச் செல்லும் உறவுகளைவிட தூரத்தில் இருக்கும் தோழமைகளே சிறந்தது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்!.
Published by:Vinothini Aandisamy
First published: