இன்று நம் எல்லோர் கையிலும் கேமரா வசதி கொண்ட செல்ஃபோன்கள் இருக்கின்றன. நம் மனதிற்கு அழகானதாக தென்படும் தருணங்களை உடனுக்குடன் படம் பிடித்து வைத்துக் கொள்கிறோம். குறிப்பாக, இயற்கை காட்சிகளை நாம் படம்பிடித்து, அவை தெளிவாக பதிவாகியிருக்கும் பட்சத்தில் மனதில் ஒரு ஆனந்தமும், புத்துணர்ச்சியும் பிறக்கும்.
இதுபோல இயற்கையை படம் பிடிப்பதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் கொண்டவர்களுக்கு செல்ஃபோன்களில் உள்ள கேமரா எல்லாம் போதுமானதாக இருக்காது. அந்த வகையில், புகைப்பட ஆர்வலர் ஒருவர், மேம்படுத்தப்பட்ட டெலஸ்கோப் ஒன்றை பயன்படுத்தி சூரிய அஸ்த்தமனத்தை படம் பிடித்துள்ளார்.
சுமார் 145 மெகா பிக்சல் கொண்ட கேமராவில் இந்தப் படம் பதிவாகியுள்ளது. அதனை ரெடிட் இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதற்கான தலைப்பில், “பிரத்யேகமாக மாற்றி அமைக்கப்பட்ட டெலஸ்கோப் மூலமாக 145 மெகா பிக்ஸல் கொண்ட சூரியணை நான் படம்பிடித்துள்ளேன். ஜூம் செய்து பாருங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : எலான் மஸ்கின் பழைய போட்டோக்களை ஏலம் விட்ட முன்னாள் காதலி... ஏன் தெரியுமா.?
படம் பிடிக்கப்பட்ட சூரியன் என்பது மிக தெளிவானதாக காட்சியளிக்கிறது. ஒரு ஓட்டினுள் பருப்பு இருப்பதை போன்ற காட்சி வடிவத்தில் இருக்கிறது.
தெளிவாக படம் பிடித்தது எப்படி
சூரியனை மிக தெளிவாக படம் பிடிக்க தாம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து, பதிவின் கீழே கமெண்ட் மூலமாக அந்த நபர் பகிர்ந்துள்ளார். அதில், “சூரியனை நேரடியாக டெலஸ்கோப் மூலமாக பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள். அது உண்மைதான் சூரியனை நோக்கி டெலஸ்கோப்பை நிலைநிறுத்தக் கூடாது.
அது கடுமையான வெப்பத்தை உள்வாங்கும் அல்லது கண் பார்வை இழப்பு போன்ற மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். நான் சூரியனை படம் பிடிப்பதற்காக பிரத்யேக முறையில் டெலஸ்கோப்பை வடிவமைப்பு செய்தேன். அத்துடன் என்னுடைய அனுபவங்கள் மூலமாக நெருக்கமான இடத்தில் படம் பிடித்தேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் பாராட்டு
சூரியனை படம் பிடித்த நபருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ரெடிட் இணையதள பயனாளர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “மிக தெளிவாக, மிக உன்னிப்பாக ஆழ்ந்து நோக்கும் வகையில், கம்ர்ஷியல் ரீதியாக ஃபோட்டோகிராஃபி தெரிந்த ஒருவர் தான் இதனை படம் பிடித்திருக்கிறார். இதை படம் பிடிப்பதற்காக அவர் மிகுந்த பொறுமையுடன் காத்திருந்திருக்க வேண்டும். அந்த பொறுமை எல்லாம் எனக்கு வராது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனாளரின் கமெண்டில், “இது மிக அற்புதமாக இருக்கிறது. இதை எங்களுக்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார். இந்த பூமி மற்றும் உலகம் குறித்து அதிகமான ஆர்வம் கொண்ட ஒருவர் தான் இதுபோன்று படம்பிடிக்க முடியும் என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Photography, Trending, Viral