• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • அமெரிக்க மனிதரின் ட்ரக்கில் சிவப்பு அணில் செய்த வேலை - இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ!

அமெரிக்க மனிதரின் ட்ரக்கில் சிவப்பு அணில் செய்த வேலை - இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ!

சிவப்பு அணில் செய்த வேலை

சிவப்பு அணில் செய்த வேலை

ஆம் கடந்த 8 ஆண்டுகளாகவே அணில்கள் தன்னுடைய காரில் வால்நட்ஸ்களை சேமித்து வைப்பதை தடுக்க திட்டம் தீட்டி இருக்கிறார்

  • Share this:
பொதுவாக அணில் அக்ரூட் பருப்புகளை (walnuts) விரும்பும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியும். வழக்கமாக இலையுதிர்காலத்தில் அணில்கள் வால்நட்ஸ்களை சேகரித்து, அவற்றை குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கின்றன. அமெரிக்க சிவப்பு அணில்கள் சிறியவை ஆனால் மிகவும் வலிமையானவை. இவை கூர்மையான, வளைந்த நகங்களை கொண்டிருக்கும்.

இதனிடையே சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு மனிதனுக்கும் அணிலுக்கும் இடையே நடைபெற்ற ஒரு சுவாரசிய போரில், அணில் வெற்றி பெற்று உள்ளது. சிவப்பு அணிலுக்கும் ஒரு மனிதனுக்கும் அப்படி என்ன போர் நடைபெற்றது என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

சமீபத்தில் சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கில் அமெரிக்காவை சேர்ந்த 56 வயதான பில் ஃபிஷர் (Bill Fischer) ஒரு தகவலை ஷேர் செய்தார். அவர் தனது போஸ்ட்டில் ஒரு சிவப்பு அணில் கிட்டத்தட்ட சுமார் 42 கேலன் (சுமார் 150 கிலோ) வால்நட்ஸ்களை தன்னுடைய காரில் சேமித்து வைத்திருப்பதாக சுவாரஸ்ய தகவலை ஷேர் செய்தார். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவில் (North Dakota) பகுதியில் வசித்து வரும் பில் ஃபிஷர், தனது 4 நாள் ஆஃபிஸ் ட்ரிப் முடித்து வந்த பிறகு இதனை கண்டுபிடித்து உள்ளார். இவருக்கும் அணிலுக்கும் நடக்கும் இந்த போரட்டம் முதல் முறை அல்ல.

ஆம் கடந்த 8 ஆண்டுகளாகவே அணில்கள் தன்னுடைய காரில் வால்நட்ஸ்களை சேமித்து வைப்பதை தடுக்க திட்டம் தீட்டி இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியையே சந்தித்து இருக்கிறார்.

Also read... சாம்பார், சட்னியுடன் தட்டில் இருப்பது இட்லியா அல்லது குல்ஃபியா? வைரலாகும் ஃபோட்டோ!

ஆனால் இந்த முறை அணிலுடனான போராட்டத்தில் பில் ஃபிஷர் படுதோல்வி அடைந்து விட்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் இதுவரை இல்லாத அளவு வால்நட்ஸ்களை அணில் இவரது காரில் சேமித்து வைத்துள்ளது. இன்ஷுரன்ஸ் ஏஜெண்டாக பணிபுரியும் பில் ஃபிஷர், chevy avalanche பிக்கப் ட்ரக் வாகனம் வைத்துள்ளார்.

இந்த ட்ரக்கை அவர் வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தார். ஆஃபிஸ் ட்ரிப் முடித்து விட்டு திரும்பி வந்த பிறகு தன் வாகனத்தை பார்த்து அதிர்ந்து போனார் பில் ஃபிஷர். தனது ட்ரக்கை வால்நட்ஸ் களஞ்சியமாக அணில் மாற்றி வைத்திருப்பதை கண்டும், இதற்கு முன்பான ஆண்டுகளில் அணில் சேமித்து வைத்திருந்த வால்நட்ஸ்களின் எண்ணிக்கையை விட இது பன்மடங்கு அதிகம் என்பதால் செய்வதறியாது திகைத்து போனார்.



மேலும் இது பற்றி கூறியுள்ள பில் ஃபிஷர், கடந்த 2013 முதல் தனது காரை ஸ்டோரேஜாக சிவப்பு அணில் பயன்படுத்தி வருவதாகவும், பார்க்கிங்கில் பிற கார்கள் இருந்தாலும் கூட ஒரு சிவப்பு அணில், வால்நட்ஸ்களை தனது வாகனத்தில் மட்டுமே சேமித்து வைத்து வருவதாக தெரிவித்து உள்ளார். இதன் மூலம் அணில் தனது காரை மட்டுமே அதிகம் விரும்புகிறது என்றும் பில் ஃபிஷர் வேடிக்கையாக கூறி இருக்கிறார்.

என் டிரக்கின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதிகளும் வால்நட்ஸ்களால் அடைக்கப்பட்டுள்ளது. பம்பர், வீல் வெல் மற்றும் கதவுகளின் பாகங்களுக்குளும் அணிலால் நுழைய முடிந்தது என்றார். இதில் வேடிக்கை என்னவென்றால் வால்நட் மரத்திற்கு அடியில் இருந்து தனது ட்ரக்கை எடுத்து விட்டு சாலைக்கு அருகே கொண்டு போய் நிறுத்திய பிறகும் கூட, அணில்கள் தன் ட்ரக்கை தேடி வந்து ஸ்டோரேஜாக பயன்படுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளதாக பில் ஃபிஷர் கூறி இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: