பிரபல மேட்ரிமோனியல் இணையதளமான Jeevansathi.com-ன் சமீபத்திய ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டு அதாவது 2022-ஆம் ஆண்டில் ஆசிரியர்களை விட மென்பொருள் வல்லுநர்கள் (software professionals), சுமார் 5.97 மடங்கு அதிகம் திருமண முன்மொழிவுகளை (Marriage proposals) பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து பேங்கிங், ஹெச்ஆர், அட்மின். மருத்துவர், நிதி, ஆய்வாளர், ஆலோசகர், அக்கவுண்ட்ஸ், மார்க்கெட்டிங், பேராசிரியர் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்த ஆய்வு கண்டுபிடிப்புகள் 30 - 33 வயது வரம்பில் உள்ள யூஸர்கள் அதிகரித்துள்ளதையும் வெளிப்படுத்தி உள்ளது. இதன்படி 30 வயதைத் தாண்டிய பிறகும் கூட மக்கள் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. அதாவது 30 வயதும் கூட திருமணத்திற்கான சிறந்த வயது தான் என்று மக்களின் எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டில் குறிப்பிட்ட இந்த மேட்ரிமோனியல் வெப்சைட்டில் தங்களை ரிஜிஸ்டர்ட் செய்து கொண்டதில் சுமார் 39% புதிய யூஸர்கள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்துள்ளனர்.
மக்கள் திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன் தங்கள் குடும்பங்கள் மீது நிதிச்சுமையை சுமத்துவதை விட நிதி வலிமைக்கு முன்னுரிமை அளிப்பதாக நம்பப்படுகிறது.. jeevansathi-யின் பிசினஸ் ஹெட்டாக இருக்கும் ரோஹன் மாத்தூர் கூறுகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு வணிக வளர்ச்சியுடன் கூடிய ஆண்டாக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் மேட்ச்மேக்கிங் துறையில் சுவாரஸ்யமான ட்ரெண்ட்ஸ்களின் காலகட்டமாகவும் இருந்தது.
எங்கள் பிளாட்ஃபார்மில் யூஸர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டும், எங்களுடைய பரந்த அளவிலான சேவைகள் மூலம் எங்கள் யூஸர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதின் மூலமும் உண்மையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கம்யூனிட்டி, லொக்கேஷன் மற்றும் வருமானம் உட்பட 20-க்கும் மேற்பட்ட ஃபில்ட்டர்ஸ்களுடன் சரிபார்க்கப்பட்ட லட்சக்கணக்கான ப்ரொஃபைல்ஸ்களுக்கான அணுகலை எங்கள் பிளாட்ஃபார்ம் வழங்குகிறது. அதே போல எங்கள் யூஸர்கள் தங்களுக்கு விருப்பமான மேட்ச்களுடன் இணைய மற்றும் சிறந்த பார்ட்னர்ஸ்களை கண்டறிய Free chat அம்சத்தை நாங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெஸ்ட்-இன்-கிளாஸ் சர்விஸ்களை தொடர்ந்து வழங்குவதையும், சரியான மேட்சிங்கை கண்டறிய அவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு மதிப்பை சேர்ப்பதை நாங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம் என்று ரோஹன் மாத்தூர் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.