ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பிட் புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களுக்குத் தடை - கான்பூர் மாநகராட்சி அதிரடி உத்தரவு

பிட் புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களுக்குத் தடை - கான்பூர் மாநகராட்சி அதிரடி உத்தரவு

பிட் புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களைத் தடை செய்த கான்பூர்

பிட் புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களைத் தடை செய்த கான்பூர்

பரந்த காடுகளில் வாழ்ந்து பழகிய இந்த நாயினங்கள் ஊருக்குள் சிறிய இடங்கள்/வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்படுகிறது. இதனால் அவை மன அழுத்தத்திற்கு ஆளாகி மக்களை தாக்குகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanpur, India

உத்தரபிரதேசத்தில், கான்பூர் மாநகராட்சி (KMC) செப்டம்பர் 27, செவ்வாய் அன்று, பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக நகர எல்லையில் பிட் புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களைத் தடை செய்தது. மேயர் பிரமிளா பாண்டே அறிவித்த இந்த முடிவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்கடி சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

செப்டம்பர் 23ஆம் தேதி காட் பகுதியில் பசுவை நாய் கடித்த சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. வைரலான காணொளியில், பசு தனது தாடைகளை அதன் பற்களுக்கு இடையில் பிடித்தபடி வலியால் துடித்தது. நாயின் உரிமையாளரும் மற்றவர்களும் பசுவைக் காப்பாற்ற போராடினர், தடியால் அடித்து, கைகளால் அடித்து போராடி. நாய் விடுவதற்குள், பசுவின் வாயில் ஆழமான காயங்கள் இருந்தன.

உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் சமீப நாட்களாக மனிதர்கள் மீதும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போக காஜியாபாத்தில், சில நாட்களுக்கு முன், பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனை பிட் புல் தாக்கியது. சிறுவனின் முகத்தில் 150 தையல்கள் போடப்பட்டன. குருகிராம், லக்னோ, மீரட் பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகிவரும் 'குழந்தை' தீவு !

காரணம்:

ஒரு பிட் புல் அவற்றின் தசைக் கட்டமைப்பிற்காக வளர்க்கப்படுகின்றன. நாய் சண்டை விளையாட்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், ராட்வீலர்கள் வலுவானவை. முதலில், சந்தைக்கு கால்நடைகளை ஓட்டுவதற்காக வளர்க்கப்பட்ட இந்த நாய்கள் தற்போது செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. பரந்த காடுகளில் வாழ்ந்து பழகிய இந்த நாயினங்கள் ஊருக்குள் சிறிய இடங்கள்/வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்படுகிறது. இதனால் அவை மன அழுத்தத்திற்கு ஆளாகி மக்களை தாக்குகின்றன.

5,000 அபராதம்?

கான்பூர் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானம் அறிக்கைகளின்படி, ஆபத்தானதாகக் கருதப்படும் பிட்புல் மற்றும் ராட்வீலர் ஆகிய இரண்டு இனங்களையும் தடை செய்தது. இந்த இரண்டு இனங்களின் நாய்களை யாராவது வளர்ப்பது அல்லது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் மற்றும் நாய் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Ban, Dog, Kanpur S24p43, Uttar pradesh